Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதி கையில் 18 படங்கள்

26 மார், 2019 - 10:33 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-have-18-films-in-Hand

சினிமாவில் நுழைவதற்கு விஜய் சேதுபதிக்கு நீண்ட கால போராட்டம் தேவைப்பட்டது. சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து, தென்மேற்கு பருவக்காற்று மூலம் ஹீரோவாகி குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்தார்.

அவரது கேரியரில் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடிதான், சேதுபதி, ஆண்டவன் கட்டளை, தர்மதுரை, விக்ரம் வேதா, 96, பேட்ட உள்ளிட்ட வெற்றிப் படங்களும் உண்டு. புறம்போக்கு என்கிற பொதுவுடமை, சீதக்காதி, ஜூங்கா, ஆரஞ்சு மிட்டாய், ரம்மி, வன்மம் மாதிரியான வித்தியாசமான முயற்சிகளும் உண்டு, இறைவி, காதலும் கடந்து போகும், பண்ணையாரும் பத்மினியும் மாதிரி தோல்வி படங்களும் உண்டு.

2010ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானவர் இந்த 9 ஆண்டுகளில் 28 படங்களில் நடித்து முடித்து விட்டார். 96 அவரது 25வது படம். இதுதவிர 10 படங்கள் வரை சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தற்போது அதிக படங்களை கையில் வைத்திருப்பதும் அவர் தான். அவர் நடித்து முடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் அடுத்த வாரம் வெளிவருகிறது.

இது தவிர காக்கா முட்டை மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி, பண்ணையாரும் பத்மினியும் எஸ்.யூ.அருண்குமார் இயக்கும் சிந்துபாத், சீனுராமசாமி இயக்கும் மாமனிதன், இவரது இயக்கத்திலேயே வெளிவராமல் இருக்கும் இடம் பொருள் ஏவல், அறிமுக இயக்குனரின் துக்ளக், விஜயா புரொடக்ஷன் தயாரிக்கும் பெயரிடப்படாத படம், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் சிறிய பட்ஜெட் படமான லாபம், அடுத்து பெரிய பட்ஜெட் படமான சரித்திரப் படம், எஸ்.யூ.அருண் குமாரின் உதவியாளர் இயக்கும் படம், எஸ்.பி.ஜனநாதன் உதவியாளர் இயக்கும் படம், பொன்ராம் இயக்கும் படம், சேரன் இயக்கும் படம், சேதுபதி 2ம் பாகம், புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் படம், இது தவிர தெலுங்கில் நரசிம்ம ரெட்டி, மற்றும் ஒரு தெலுங்கு படம், மலையாளத்தில் ஒரு படம் என விஜய் சேதுபதியின் பட்டியலில் 18 படங்கள் இருக்கிறது. 2 ஆண்டு கால்ஷீட் டயரி நிறைந்து, ஒரே நேரத்தில் 18 படங்களை கையில் வைத்திருக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான்.

இதுகுறித்து விஜய் சேதுபதி கூறியதாவது: நிறைய பேர் நிறைய படங்கள் நடிக்கிறார்கள். ஆனால் நான் மட்டுமே நடிப்பதாக செய்திகள் வருகிறது. தினமும் நிறைய கதைகள் கேட்கிறேன். பிடித்த கதைகளில் நடிக்கிறேன். ஆனால் காத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன். அதுதான் பட்டியல் நீளமாக இருக்கிறது. பெரும்பாலும் கதை கேட்பதை தவிர்க்கிறேன். கதை பிடிக்கவில்லை என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது.

பிடித்திருக்கிறது என்று சொன்னால் நடியுங்கள் என்று வற்புறுத்துகிறார்கள், பிடிக்கவில்லை என்று சொன்னால் பிடிக்வைக்க முயற்சிக்கிறார்கள். இதனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு பணமோ, படங்களின் எண்ணிக்கையோ முக்கியமில்லை. நல்ல படங்களில் நடித்து மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அவ்வளவுதான். என்கிறார் விஜய் சேதுபதி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆக.,10க்கு மாறிய நேர்கொண்ட பார்வைஆக.,10க்கு மாறிய நேர்கொண்ட பார்வை ராதாவிக்கு தயாரிப்பாளர் சங்கமும் கண்டனம் ராதாவிக்கு தயாரிப்பாளர் சங்கமும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

செளக்கித்தார் சொடலையார் - கொல்டிபுரம் ,உகான்டா
26 மார், 2019 - 13:26 Report Abuse
செளக்கித்தார் சொடலையார் வருமான வரித்துரையும் அமலாக்கத்துறையும் சரியான முறையில் விசாரித்தால் உண்மை தெரிய வரும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in