Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராதாரவி பேச்சு - விசாகா கமிட்டி வேண்டும் : நயன்தாரா

25 மார், 2019 - 16:51 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-demands-Visaka-committe-in-Nadigar-Sangam

கொலையுதிர் காலம் படத்தின் டிலைர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாராவை பற்றி மறைமுகமாக விமர்சித்தார். நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் கடவுள் வேடத்தில் கே.ஆர்.விஜயா தான் நடிப்பார். ஆனால் இன்றைக்கு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றாகி விட்டது. பார்த்தவுடன் கும்பிடுவது போல இருப்பவர்களும், பார்த்ததும் கூப்பிடுபவர்கள் போல் உள்ளவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள். காரணம் ரசிகர்கள் யார் நடித்தாலும் ரசிக்கத் தொடங்கி விட்டார்கள் என்றார்.

ராதாரவியின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. விக்னேஷ் சிவன், சின்மயி, விஷால், நடிகர் சங்கம், வரலட்சுமி, ராதிகா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுக., கட்சியிலிருந்து ராதாரவி, தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு...

பொதுவாக நான் அறிக்கை கொடுப்பது அரிதான விஷயும். நான் பேசுவதை விட என் பணி பேசும் என்று நினைப்பவள். ஆனால் சில நேரங்களில் இது போன்ற செயல்களுக்கு நான் குரல் கொடுத்தே ஆக வேண்டியிருக்கிறது.

முதலில் ராதாரவியின் வெறுக்கத்தக்க பேச்சுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த திமுக., தலைவர் முக.ஸ்டாலினுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

ராதாரவி போன்று பெண்களை வெறுக்கத்தக்க பேசும் ஆண்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். உங்களுக்கு உயிர் கொடுத்ததும் ஒரு பெண் தான். பாலியல் ரீதியாக கருத்து சொல்லி, பெண்களை தரம் தாழ்த்தும் ஆண்கள் குடும்பத்தில் வாழும் பெண்கள் மீதும் நான் மிகவும் பரிதாபப்படுகிறேன்.

மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு முன் மாதிரியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வேறு ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். பெண்களுக்கு இது கடினமான காலம். ஒவ்வொரு துறையிலும் பெண்கள் ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். ஆனால் ராதாரவி போன்றவர்கள் புகழ் வெளிச்சத்திற்காக மலிவான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் இது போன்ற பேச்சுகளை சிலர் கைதட்டி, சிரித்து உற்சாகப்படுத்துகின்றனர்.

ராதாரவி போன்றவர்களின் பேச்சை ரசிகர்களும், பொதுமக்களும் கண்டிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவும், எனக்கு எதிராகவும் ராதாரவி தெரிவித்த தரக்குறைவான கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கடவுள் அருளால் அற்புதமான துறையில் நல்ல வாய்ப்புகள் வருகின்றன. எனது நடிப்பு திறனுக்கு ரசிகர்களும் ஒரு இடத்தை கொடுத்துள்ளனர். எனக்கு எதிராக எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் சீதா, பேய், பெண் தெய்வம், தோழி, மனைவி, காதலி என பல விதமான கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன்.

இறுதியாக, நடிகர் சங்கத்திற்கு ஒரு கேள்வி. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, விசாகா குழு வழிகாட்டுதல்படி, நடிகர் சங்கத்தில் புகார் குழு ஒன்றை அமைப்பீர்களா.?

எனக்கு ஆதரவாக துணை நின்ற அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (34) கருத்தைப் பதிவு செய்ய
இனியும் தொடர்ந்தால்.... ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கைஇனியும் தொடர்ந்தால்.... ராதாரவிக்கு ... விஜய் ஆண்டனி படத்தில் கஸ்தூரி விஜய் ஆண்டனி படத்தில் கஸ்தூரி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (34)

mariyappangopinathan - Chennai,இந்தியா
27 மார், 2019 - 10:21 Report Abuse
mariyappangopinathan ராதா ரவி சொல்வதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து. மேலும் கச்சை கட்டிக்கொண்டு மானம் போனாலும் பரவாயில்லை பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் என ஆடுபவர்களுக்கு இந்த கருது பெரிய விஷயமில்லை. இந்த கருத்தை பெரிது படுத்தி அதன் மூலம் தங்களுக்கு மேலும் ஆதாயம் தேடும் பொருட்டு இந்த நடிகைகள் இப்படி அறிக்கை விடுகிறார்கள். முடிந்தால் கச்சை கட்டி நடிப்பதை விட்டுவிட்டு அந்த காலத்து நடிகைகளைப் போல் முழு ஆடைகளுடன் நடித்து தங்கள் திறமைகளை அவர்கள் வெளிப்படுத்தி காட்டட்டுமே.
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
26 மார், 2019 - 15:20 Report Abuse
Sathish சினிமா சினிமா என்று அலைபவனை பிடித்து குளங்களையும் குட்டைகளையும் தூர்வார வைக்க வேண்டும். நாட்டுக்கு எதாவது நல்ல விஷயங்களை செய்யுங்கள் என்று உன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லு. கேரளாவில் இருந்து பஞ்சம் பிழைக்க தமிழ் நாட்டிற்கு வருவது மலையாளிகள்தான். வந்தாரை வாழவைக்கும் எங்கள் தமிழகத்திற்கு உங்களை போன்ற மலையாளிகள் என்ன கைம்மாறு செய்துவிட்டீர்கள்? சுயநலவாதிகள்.
Rate this:
sanku - afkan,ஆப்கானிஸ்தான்
26 மார், 2019 - 10:23 Report Abuse
sanku முதலில் சினிமாக்காரர்களை பற்றி பேசுவதை / செய்திகளை நிறுத்துவோம். அவர்களும் நம்மிடம் சுரண்டி வியாபாரம் செய்கிறவர்கள் தான். அதையே நாள் முழுவதும் செய்தியாக கொள்வது முட்டாள்த்தனம்.
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
26 மார், 2019 - 10:05 Report Abuse
THENNAVAN ராதா ரவியை விசாக கமிட்டி விசாரிக்கட்டும் .சேச்சி எதை முறையாக பின்பற்றி வாழ்கிறார் இவருக்கு ரோசம் பாத்துக்கிட்டு வருது.
Rate this:
sri - mumbai,இந்தியா
26 மார், 2019 - 10:00 Report Abuse
sri ராதாரவி போன்ற நபர்கள் சமூகத்தில் மலிந்துவிட்டதன் காரணம் , திராவிட தலைவர்கள் தான். அன்று , அண்ணா மிகவும் சாமர்த்தியமாக பேசினார் என்று பானுமதியை பற்றியும் , கருணாநிதி சட்டசபையில் அனந்தநாயகியை பற்றியும் பேசியதை கண்டிக்காமல் , தமிழ் அடுக்கு பேச்சையும் , ஆபாசமான நகைச்சுவையும் மெச்சியதால் வந்த விளைவு இது. அனைத்து திராவிட தலைவர்களும் இந்த மாதிரி பேச வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கி போகிறார்கள். இப்போது ஓட்டுக்காக தி மு க ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கினாலும் , பழைய கருணாநிதி, அண்ணா பேசின பேசிச்சுகளை என்ன செய்ய முடியும்?
Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in