Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனியும் தொடர்ந்தால்.... ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை

25 மார், 2019 - 15:24 IST
எழுத்தின் அளவு:
Nadigar-Sangam-warns-Radharavi

நயன்தாரா நாயகியாக நடித்துள்ள 'கொலையுதிர் காலம்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் ராதாரவி பேசியது சர்ச்சையாக மாறியது. இதனால் திரையுலகினர் பலர் கண்டனம் தெரிவித்தனர். அவர் சார்ந்த திமுக., கட்சி அவரை கண்டித்திருப்பதுடன் கட்சியிலிருந்து தற்கொலிமாக நீக்கி உள்ளது.

இந்நிலையில் ராதாரவிக்கு நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு...

சமீபத்தில் நடந்த கொலையுதிர் காலம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பெண்களைக் கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய இரட்டை அர்த்த வசனங்களைக் கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது. இதை, தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாகத் தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும், திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்திப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது.

இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும் அவமானமான சூழ்நிலையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதைத் தாங்கள் ஏன் உணரவில்லை?

திரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக 50 ஆண்டுகள் நீண்ட அனுபவத்தைக் கொண்டிருக்கக்கூடிய தாங்கள், தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால், அது வருகிற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.

ஆனால், இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுகள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது. மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையும் சீரழியும் என்பதை ஏன் உணரவில்லை? எது எப்படி இருப்பினும், இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

அதைத் தவிர்த்து, இதுபோன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால், தென்னிந்திய நடிகர் சங்கம் திரைத்துரையில் தங்களுக்குத் தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றித் தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
'சிவப்பு, மஞ்சள், பச்சை' படப்பிடிப்பு நிறைவு'சிவப்பு, மஞ்சள், பச்சை' ... ராதாரவி பேச்சு - விசாகா கமிட்டி வேண்டும் : நயன்தாரா ராதாரவி பேச்சு - விசாகா கமிட்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Bhaskaran - Chennai,இந்தியா
28 மார், 2019 - 08:14 Report Abuse
Bhaskaran ராதாரவி அப்படிதான் பேசுவார்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
27 மார், 2019 - 04:04 Report Abuse
meenakshisundaram என்ன ஸ்டாலின் அவர்களே பழைய சகவாசம் தானே? அப்புறமா சேர்த்துக்கலாம் ,மக்கள் மடை யா ங்க .மறந்துருவான் .ரவியோ தப்பாவே நினைக்க மாட்டான் ,
Rate this:
26 மார், 2019 - 11:48 Report Abuse
பாரதன் "அது என்ன இனிமேல் நடந்து கொண்டால்?" இதுவரை நடந்து கொண்டது போதாதா? நடவடிக்கை இப்போதே எடுக்கத் தவறினால் நடிகர் சங்கத்தின் மீதே சந்தேகம் எழும். சங்க உறுப்பினருக்கே பாதுகாப்பாக இருக்க முடியாது என்றால் சங்கம் எதற்கு? அதுவும் ஒரு பெண்ணின் கௌரவத்திற்கே இழுக்கு ஏற்படும் போதே. ராதாரவி மட்டும்தான் திமுகவின் உறுப்பினர். அந்த கட்சிக்கு இருக்கும் பொறுப்புணர்வு கூட "நடிகர் சங்கத்திற்கு" இல்லை என்பது வெட்கக் கேடு அல்லவா?
Rate this:
Suresh - Moroni,கோமோரஸ்
25 மார், 2019 - 17:38 Report Abuse
Suresh இந்த விமர்சனத்தை பொதுவாக சொல்லியிருந்தால் தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பாரகள் சொல்லிய இடம் மாறிப்போனதால் ராதாரவியின் கருத்துக்கள் விமர்சையாக்கப்பட்டுவிட்டது. அன்று கதாநாயகியாக நடிப்பதற்கும் கவர்ச்சியாக நடிப்பதற்கும் வேறு வேறு நாயகிகள் இருந்தார்கள் இன்று இரண்டுமே ஒரே நாயகியால் படமாக்கப்படுகிறது அந்த அளவிற்கு கண்ணியம் சீரழிந்து விட்டது இத அரசியல் ஆதாயத்திற்கும் காழ்புணர்ச்சிக்கும் பயன்படுத்தாமல் கருத்து சுதந்திரமாக எடுத்துகொல்வதே தமிழனின் பண்பாகும்
Rate this:
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
25 மார், 2019 - 17:21 Report Abuse
வழிப்போக்கன் அடிச்சுட்டுவேன் தெரியுமா? ( கண்ணடித்து கொண்டே பையனை செல்லமாக அதட்டும் அம்மாவை போல இருக்கு..பொள்ளாச்சி திருநாவுக்கரசு அம்மா கூட இப்படித்தான்.. விளைவு அண்ணா விட்டுக்கொண்டு அண்ணா என்ற வீடியோ கதறல்.. திருநாவுக்கரசு ராதாரவி போன்றவர் உருவாக இது முக்கிய காரணம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in