Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்விழா படங்கள் : தெய்வமகன் - ஆஸ்கருக்கு சென்ற முதல் படம்

25 மார், 2019 - 15:02 IST
எழுத்தின் அளவு:
Deiva-Magan-in-50th-year

தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்று தெய்வமகன். நடிகர் திலகம் சிவாஜி நடித்த டாப்-10 படங்களில் ஒன்று. 1969ம் ஆண்டு வெளிவந்த தெய்வமகனுக்கு, இது பொன்விழா ஆண்டு. ஒரு பக்கா கமர்ஷியல் படத்தின் திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதராணமாக அமைந்த படம்.

சிவாஜி, அப்பா, இரட்டை மகன்கள் என மூன்று வேடத்தில் நடித்திருப்பார். அதில் இரண்டில் அவர் அகோர முகத்துடன் நடித்திருப்பதுதான் படத்தின் ஹெலைட். அகோர முகம் கொண்ட சிவாஜிக்கும், அப்பா சிவாஜிக்கும் நடக்கும் உரையாடல் காட்சி இப்போதும் பிரபலம். இதில் அப்பா சிவாஜிக்கு பண்டரிபாய் ஜோடியாகவும், மகன் சிவாஜிக்கு ஜெயலலிதா ஜோடியாகவும் நடித்திருந்தனர். மேஜர் சுந்தர்ராஜன், எம்.என்.நம்பியார். சித்தூர் நாகய்யா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார். ஏசி.திருலோகசந்தர் இயக்கி இருந்தார்.

“தெய்வமே... தெய்வமே...நன்றி சொல்வேன்...”, “காதல் மலர் கூட்டம் ஒன்று...”, “காதலிக்க கற்றக் கொள்ளுங்கள்...”, “கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா...” போன்ற தேனினும் இனிய பாடல்களை கொடுத்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். பெரியண்ணா பிலிம்ஸ் தயாரித்த படத்தை சிவாஜியின் சாந்தி பிலிம்ஸ் வெளியிட்டது.

ஆஸ்கர் விருதுக்கு முதன் முறையாக பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் படம். படம் விருதை பெறாவிட்டாலும் "யார் இந்த சிவாஜி?" என்று ஆங்கிலேயர்களை கேட்க வைத்தது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ராதாவை நீக்குங்கள் : ராதாரவிக்கு விஷால் கண்டனம்ராதாவை நீக்குங்கள் : ராதாரவிக்கு ... 'சிவப்பு, மஞ்சள், பச்சை' படப்பிடிப்பு நிறைவு 'சிவப்பு, மஞ்சள், பச்சை' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ambika. K - bangalore,இந்தியா
28 மார், 2019 - 09:44 Report Abuse
Ambika. K ஆஸ்கர் விருது வேறு மொழியிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்களுக்கு கொடுக்கமாட்டார்கள் தெய்வமகன் ஹிந்தி படத்தின் ரீமேக்
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
26 மார், 2019 - 12:27 Report Abuse
Vasudevan Srinivasan இவருக்கு ஆஸ்கார் கொடுத்திருந்தால் ஒவ்வொருமுறையும் இவருக்கு மட்டுமே கொடுக்க வேண்டியிருக்கும்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in