Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தலைவி' - கங்கனாவுக்கு 25 கோடி சம்பளம் ?

25 மார், 2019 - 12:34 IST
எழுத்தின் அளவு:
Kangana-Ranaut-salary-Rs.25-crore-in-Thalaivi.?

தமிழ் சினிமா, தமிழக அரசியல், இந்திய அரசியல் என தான் சார்ந்த துறைகளில் அதிகம் கவனிக்கப்பட்ட ஆளுமையாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவருடைய வாழ்க்கை வரலாறு இரண்டு தனித்தனி திரைப்படங்களாகவும், ஒரு வெப் சீரிஸ் ஆகவும் உருவாகி வருகிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக, விஜய் இயக்கும் 'தலைவி' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், அது ஏறக்குறைய உறுதியான தகவலாக மீடியாக்களில் பரவி வருகிறது.

இதனிடையே, இந்தப் படத்தில் நடிப்பதற்காக கங்கனாவுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது உண்மை என்றால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமை கங்கனாவுக்குச் சேரும்.

தலைவி' படம் தமிழில் எடுக்கப்பட்டாலும் அந்தப் படத்திற்கு இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்தான், கங்கனா அந்த அளவிற்கு சம்பளம் கேட்டுள்ளார் என்கிறார்கள். கங்கனா நாயகியாக நடிப்பதால் தற்போது படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகும் நிலை உருவாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வில்லன் நடிகருக்கு வில்லனான விழாப் பேச்சுவில்லன் நடிகருக்கு வில்லனான விழாப் ... ராதாவை நீக்குங்கள் : ராதாரவிக்கு விஷால் கண்டனம் ராதாவை நீக்குங்கள் : ராதாரவிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29 மார், 2019 - 21:22 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அம்ம்மாவே ஆறு கோடிக்காக A-1 பட்டம் வாங்கி தியாகம் பண்ணாங்க. அதை கதை எடுக்க நடிகை சம்பளம் 25 கோடியா? அநியாயம். அப்புறம் டயர் நக்கீஸ் ரோலுக்கு யாரை போடுறீங்க. ஒரிஜினல் ஆளுங்களை போட்டா தத்ரூபமா செய்வாங்க.
Rate this:
sakthi -  ( Posted via: Dinamalar Android App )
25 மார், 2019 - 19:03 Report Abuse
sakthi intha Padam vantha 5 kodi kooda collection pannathu, ithula 25 kodi samabalam veraya? producer entha koil la pichai edukka poraro??
Rate this:
skv - Bangalore,இந்தியா
25 மார், 2019 - 16:02 Report Abuse
skv<srinivasankrishnaveni> ஜெயாவை பழிவாங்கறாங்களா இந்தபொம்பளைய போட்டு பரட்டைத்தலையும் நீண்டகாலுத்துமா ஒட்டைச்சிவிங்கியாட்டம் இருக்கு இந்தலெடி ஜெயாவின் அழகே தனி இந்தப்பொண்ணுமூஞ்சிலே மரக்கிளையேதான் இருக்கு வித்யாபாலன் தான் பொருத்தம் அய்யய்யோ இவ்ளோ கோடியா தரணும் இந்தமூஞ்சிக்கு கண்ராவியே படம் போகாது படுத்துக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in