Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: சினிமாவில் வாரிசுகளை அனுமதிக்காத சோபன் பாபு

24 மார், 2019 - 12:20 IST
எழுத்தின் அளவு:
sopan-babu-not-allowed-his-children-in-cinema

பொதுவாக சினிமா நடிகர்கள் தங்கள் வாரிசுகளையும் நடிகர்களாக களம் இறக்குவார்கள். அதில் சிலர் வெற்றி பெறுகிறார்கள். சிலர் தோற்று ஒதுங்கி விடுகிறார்கள். வாரிசுகளை அறிமுகப்படுத்தாத நடிகர்கள் அபூர்வம். அவர்களில் ஒருவர் சோபன் பாபு. தெலுங்கு சினிமாவில் 30 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக இருந்தவர். ஆனால் தன் வாரிசுகளை சினிமாவில் அனுமதிக்கவில்லை. அவர்கள் தற்போது தொழில்துறையில் சிறந்து விளங்குகிறார்கள்.

சோபன் பாபுவின் இயற்பெயர் உப்பு சோபன சலபதிராவ். 1937 ஆம் ஆண்டு ஜனவரி 14ந் தேதி அவர் பிறந்தார். தெய்வ பலம் எனும் படத்தின் மூலம் அவர் தெலுங்கு திரைப்பட உலகில் அடியெடுத்து வைத்தார். எனினும் பக்த சபரி எனும் திரைப்படமே முதலில் வெளியானது. 1965 ஆம் ஆண்டு வீர அபிமன்யு படத்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடித்தார். பின்னர் மனுசுலு மாரலி எனும் படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க அந்த படம் பெறும் வெற்றி பெற்று அவரை முன்னணி நாயகனாக்கியது.


சோபன் பாபு மிகவும் நேர்த்தியாக உடை அணிந்து அழகாக தோன்றக் கூடியவர். ஆந்திர திரைப்பட உலகிலேயே மிகவும் அழகான நடிகர் என்று அவர் பாராட்டப்பட்டார். அவர் எந்தவிதமான உடை அணிந்து வந்தாலும் அவருக்கு பொருத்தமாக இருக்கும். பல்வேறு விதமான பாத்திரங்களை ஏற்று நடித்த அவர் மிகவும் ஸ்டைலாக நடித்து ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார்.


பிலிம்பேர் விருதுகளை 4 முறை வென்றுள்ள அவர் ஆந்திர மாநில அரசின் நந்தி விருதுகளை 5 முறை வென்றிருக்கிறார். மொத்தம் 250 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பிசியான நடிகரான ராட்சசன் ஆசிரியர்பிசியான நடிகரான ராட்சசன் ஆசிரியர் என்ஜிகே டப்பிங் பேச தொடங்கினார் சூர்யா என்ஜிகே டப்பிங் பேச தொடங்கினார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Muga Kannadi - chennai,இந்தியா
26 மார், 2019 - 16:24 Report Abuse
Muga Kannadi ஆமா ஒரு முக்கியமான விஷயத்தை ஏன் மூடி மறைக்கிறீர்கள் ?
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
25 மார், 2019 - 19:41 Report Abuse
Bhaskaran சென்னை சூளைமேட்டில் அவர் வீடுஉள்ள பகுதியில் தெலுகுரசிகர்கள் சிலைவைத்துள்ளார்கள்
Rate this:
RAJESH - Pondicherry ,இந்தியா
25 மார், 2019 - 10:12 Report Abuse
RAJESH அப்புறம் ....ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லாம விட்டுட்டீங்களே....😷
Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
24 மார், 2019 - 13:50 Report Abuse
raghavan இவருக்கு சென்னையில் சிலை இருக்காமே, அது எப்படி?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in