Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஆர்ஆர்ஆர் உடன் மோதத் தயாராகும் சல்மான் கான் ?

23 மார், 2019 - 14:57 IST
எழுத்தின் அளவு:
Salman-khan-to-clash-with-RRR

2020ம் ஆண்டின் மிகப் பெரும் பட்ஜெட் படங்களில் ஒன்றாக 'ஆர்ஆர்ஆர்' படம் உருவாகி வருகிறது. ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை ஒரு தெலுங்குப் படமாகவோ, ஹிந்திப் படமாகவோ உருவாக்கவில்லை. ஒரு இந்தியப் படமாக உருவாக்கி வருகிறார்கள். 'பாகுபலி' படங்கள் அளவிற்கு இந்தப் படமும் சாதனை படைக்கும் என இப்போதே பேச்சு ஆரம்பமாகிவிட்டது. அடுத்த ஆண்டு ஜுலை 30ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

அதே தினத்தில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் 'இன்ஷால்லா' படத்தை வெளியிட உள்ளார்கள் என பாலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் குறித்து சில நாட்களுக்கு முன்பு டுவிட்டரில், “20 ஆண்டுகளுக்குப் பிறகு நானும், சஞ்சய்யும் மீண்டும் இன்ஷால்லா படத்தின் மூலம் இணைந்துள்ளோம்,” என சல்மான் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர்கள் கடைசியாக இணைந்து பணியாற்றிய 'சாவாரியா' படம் 2007ல்தான் வெளிவந்தது. ஆனால், அந்தப் படத்தில் சல்மான் சிறப்புத் தோற்றத்தில்தான் நடித்திருந்தார். அதனால், அவர் அதைப் பற்றிக் குறிப்பிட மறந்துவிட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இருப்பினும் சஞ்சய் லீலா பன்சாலி, ராஜமவுலி இருவருமே பிரம்மாண்டப் படைப்புகளைக் கொடுக்கும் இயக்குனர்கள், சொன்ன சமயத்தில் படத்தை முடிக்க மாட்டார்கள். அதனால், இரண்டு படங்களின் வெளியீடுகளுமே தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது என்றும் மற்றொரு பக்கம் விமர்சிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம்.?ஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம்.? 'ச்சப்பக்' - தீபிகாவுக்குக் குவியும் பாராட்டுக்கள் 'ச்சப்பக்' - தீபிகாவுக்குக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in