உணர்ச்சிக் குவியலாய் வந்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் | ‛பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீடு கோலாகலம் : சிவப்பு கம்பள வரவேற்பில் நனைந்த திரைப்பிரபலங்கள் | டப்பிங் யூனியன் சீல் அகற்றம் | ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்ட கீரவாணி | விடுதலை படம் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது : பவானி ஸ்ரீ | மார்ச் 31ல் ஆர்யாவின் அடுத்த பட டீசர் வெளியீடு | மீண்டும் சர்ச்சையில் நாக சைதன்யா, ஷோபிதா காதல் | போலா 2ம் பாகத்திற்கு லீட் கொடுத்த அபிஷேக் பச்சனின் சர்ப்ரைஸ் என்ட்ரி | இளையராஜா இசையில் ஹிந்தியில் உருவான மியூசிக் ஸ்கூல் | இறப்பதற்கு முன் மஞ்சு வாரியரிடம் இன்னொசென்ட் சொன்ன கடைசி வார்த்தை |
50 தயாரிப்பாளர்கள் இணைந்து அவர்களுடைய நண்பர் செல்வகண்ணனை இயக்குனராக அறிமுகப்படுத்தித் தயாரித்த 'நெடுநல்வாடை' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி நாயர். திருநெல்வேலி பக்கத்து கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் அவருடைய இயல்பான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. விமர்சகர்களும் அவரது நடிப்பை வெகுவாகப் பாராட்டினர்.
நடிகையாக அறிமுகமான அஞ்சலி நாயர், ஒரு தனியார் விமான நிறுவனத்தில் ஏர்-ஹோஸ்டஸ் ஆகப் பணிபுரிகிறார். அவரைத் தேடி பல புதிய சினிமா வாய்ப்புகள் வரும், அதனால் அவர் வேலையை விட்டு வரவேண்டிய சூழ்நிலை வரும் என படம் வெளியான போதே பலரும் சொன்னார்கள். அதற்கேற்றபடி, அஞ்சலி நாயருக்குப் பல புதிய வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கிறதாம்.
சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்த அஞ்சலியை சில இயக்குனர்கள் சந்தித்து கதை சொன்னதாகத் தகவல். புதிய வாய்ப்புகளை நம்பி, தான் பார்க்கும் வேலையை அஞ்சலி விடுவாரா என்பதுதான் கேள்வி. அவரைத் தேடி வந்த வாய்ப்புகள் அனைத்துமே முன்னணி இயக்குனர்களின் வாய்ப்புகள் என்கிறார்கள். பலருக்குக் கிடைக்காத வாய்ப்புகள் அஞ்சலியின் நடிப்பைப் பார்த்து வருகிறது. அஞ்சலி என்ன செய்யப் போகிறார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.