Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லூசிபர் டிரைலர் : பிரித்விராஜூக்கு சித்தார்த் பாராட்டு

22 மார், 2019 - 14:56 IST
எழுத்தின் அளவு:
Lucifer-Trailer-:--Siddharth-praises-Prithviraj

மலையாள நடிகர் பிரித்விராஜ், மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியுள்ளார். இந்த படம் வரும் மார்ச்-28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மூன்று நிமிடம் ஓடக்கூடிய இந்த டிரைலரை பார்க்கும்போது ஏதோ பல படங்களை இயக்கிய ஒரு அனுபவஸ்தர் இயக்கிய படம் போலவே தெரிகிறது. அதனால் ரசிகர்களை மட்டுமல்லாது, திரையுலக பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக நடிகர் சித்தார்த், இந்த டிரைலரை பார்த்து பிரித்திவிராஜூக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும், “இது எனக்கு எப்போதோ தெரியும்.. இனி இப்போது உலகத்தாருக்கும் இது தெரிய போகிறது.. படங்களை உருவாக்குவதற்கென்றே பிறந்தவர்தான் பிரித்விராஜ். லூசிபர் அதிர வைக்கிறது.. பார்ப்பதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது” என பாராட்டியுள்ளார்.

பிரித்விராஜும் சித்தார்த்தும், சில வருடங்களுக்கு முன்பு 'காவியத்தலைவன்' படத்தில் இணைந்து நடித்தபோது நண்பர்களாக மாறியவர்கள் என்பதும், அப்போதே பிரித்விராஜ் விரைவில் ஒரு படத்தை இயக்குவார் என சித்தார்த் கூறினார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துருவ் விக்ரமின் தந்தையாக கவுதம் மேனன்துருவ் விக்ரமின் தந்தையாக கவுதம் ... ஹாலிவுட்டில் நுழைந்த பாபு ஆண்டனி ஹாலிவுட்டில் நுழைந்த பாபு ஆண்டனி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in