Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரீ-என்ட்ரிக்கு தயாரான ஸ்வாதி

22 மார், 2019 - 11:52 IST
எழுத்தின் அளவு:
Swathi-ready-to-re-entry

24 ஆண்டுகளுக்கு முன்பு தேவா படத்தின் மூலம் அறிமுனமாகவார் ஸ்வாதி. இதில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு அஜித்துடன் வான்மதி படத்தில் நடித்தார். இதுதவிர வசந்தவாசல், சுந்தர பாண்டியன், மாப்பிள்ளை கவுண்டர், உன்னைத்தேடி உள்பட பல படங்களில் நடித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அமீர் நடித்த யோகி படத்தில் அம்மா கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

10 ஆண்டுக்கு பிறகு ரீ-என்ட்ரிக்கு தயாராக இருக்கிறார். தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவும் ஆர்வமாக உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவீர்கள்? என்று ஆவலுடன் கேட்கிறார்கள். மேக்கப் இல்லாமல் சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார்கள். அப்படி ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பிலிருந்து தான் எனக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்தாரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள்.

நான் அவ்வப்பொழுது படங்களைப் பார்த்து வருகிறேன். முன்பைவிட இப்பொழுதுள்ள சினிமா, தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. பாகுபலி போன்ற படங்கள் உலகளவில் பேசப்பட்டது. பல தொலைக்காட்சி சேனல்கள் வந்தாலும் சினிமா என்றும் அழியாமல் நிரந்தரமாக இருக்கும். சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். நல் வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு நடிகை ஸ்வாதி கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அவதூறு பரப்பாதீர்கள், எனக்கும் குடும்பம் இருக்கிறது : பூஜா காந்திஅவதூறு பரப்பாதீர்கள், எனக்கும் ... கருத்துக்களை பதிவு செய் படத்தில் பொள்ளாச்சி சம்பவங்கள் கருத்துக்களை பதிவு செய் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in