இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
தென்னிந்தியத் தொலைக்காட்சிகளிலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிகள் நேயர்களின் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாக இருந்து வருகின்றன. வருடத்திற்கு ஒரு முறை 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
நான்கு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்கள் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதால் அதற்கான வரவேற்பும் அதிகமாகவே இருக்கிறது. தெலுங்கில் கடந்த இரண்டு சீசன்களை ஜுனியர் என்டிஆர், நானி ஆகியோர் தொகுத்து வழங்கினர். மூன்றாவது சீசனை அவர்களால் தொகுத்து வழங்க முடியாது என சொல்லிவிட்டனர். அதனால், சீனியர் ஹீரோக்களான வெங்கடேஷ், நாகார்ஜுனா ஆகியோர் தொகுத்து வழங்கலாம் என தகவல் வெளியானது.
இப்போது, விஜய் தேவரகொண்டாவிடம் டிவி நிர்வாகத்தினர் பேசி வருகிறார்களாம். இன்றைய இளம் நடிகர்களில் முன்னணியில் இருக்கும் விஜய், தொகுத்து வழங்கினால் நிகழ்ச்சியின் வரவேற்பு கூடும் என நினைக்கிறார்களாம். ஆனால், விஜய் இதற்கு சம்மதிப்பாரா என்பதுதான் கேள்வியாக உள்ளது என்கிறார்கள். அப்படி அவர் தொகுத்து வழங்க சம்மதித்தால் பெரும் தொகையை அவருடைய சம்பளமாக வழங்க டிவி நிர்வாகம் தயாராக உள்ளதாம்.