மூளையில் ரத்தக்கசிவு : லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட் | தெலுங்கில் பிசியாகும் ஐஸ்வர்யா மேனன் | பாடகர் டி.எம்.எஸ்ஸிற்கு கவுரவம் : அவரது பெயரில் சாலை திறப்பு | மனித உரிமை ஆணையத்தின் பின்னணியில் உருவாகும் படம் | புதுமுகங்கள் உருவாக்கும் 'தலைகவசமும் 4 நண்பர்களும்' | ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தை தொடங்கி வைத்தார் ராஜமவுலி | இந்திய வம்சாவளி நடிகைக்கு அமெரிக்க ஜனாதிபதி விருது | தந்தையை இழந்து வாடும் அஜித்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய் | டிவி நடிகை ப்ரீத்தியை மணந்த மகிழ்ச்சியில் ‛பசங்க' கிஷோர் | அமெரிக்க வசூலில் அடுத்த சாதனை படைத்த 'அவதார் 2' |
மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியாக உள்ள 'ஐரா, சூப்பர் டீலக்ஸ்' இரண்டு படங்களுக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ஐரா' படத்தை சர்ஜுன் கேஎம் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் அதிகப்படியான கவனத்திற்குக் காரணம் நயன்தாரா. இரண்டு வேடங்களில் அவர் நடிக்கும் படம். டீசர், டிரைலர் இரண்டுமே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. பேய் படங்கள் வருவது குறைந்த நிலையில் மீண்டும் ஒரு பேய்ப் படத்தைப் பார்க்கப் போகிறோம். கருப்பான தோற்றத்தில் கிராமத்துப் பெண் நயன்தாரா எப்படியிருப்பார் என்ற ஆர்வம் ரசிகர்களைத் தொற்றிக் கொண்டுவிட்டது.
'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் வித்தியாசமான இயக்குனராக அறியப்பட்டவர் தியாராஜன் குமாரராஜா. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய இரண்டாவது படமான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வந்த டீசர்களிலேயே இப்படத்தின் டீசர்தான் மிகவும் வித்தியாசமானது என்று பாராட்டப்பட்டது. படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது படத்தின் பெரும் வித்தியாசம்.
சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என படத்தின் மற்ற நட்சத்திரங்களும் கூடுதல் பலத்தைச் சேர்க்கிறார்கள். படத்தைப் பார்த்த பல பிரபலங்கள் இந்தப் படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் என பாராட்டி விட்டார்கள். மார்ச் 29ல் வெளியாக உள்ள இந்தப் படத்தைப் பார்க்க சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகத்தினரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மார்ச் மாதத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படங்கள் அதை பூர்த்தி செய்யுமா என்பதை இன்னும் ஒரு வாரம் காத்திருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.