திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
அக்னி தேவி படத்திற்கு தடை கோரி பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார் பாபி சிம்ஹா. அக்னி தேவ் படத்தின் பெயரை 'அக்னி தேவி' என்று மாற்றி 22-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
பாபி சிம்ஹா அளித்த புகாரின் பேரில், அக்னி தேவி என்ற படத்தின் டைரக்டர் ஜான்பால்ராஜ் மீது நந்தம்பாக்கம் போலீசார் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட (குற்ற எண் 406, 420, 469, & 470) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் கோவை சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அக்னி தேவி படத்திற்கு நீதிமன்றத்தில் தடை கோரினார் பாபி சிம்ஹா. அதன்பேரில், கோவை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் அக்னி தேவி படத்தினை வெளியிட தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், படத்தினை வெளியிடுவதில் உள்ள உண்மைத் தன்மையை கண்டறிய நீதிமன்ற ஆணையாளராக வழக்கறிஞர் ஒருவரையும் நியமித்துள்ளது.
நீதிமன்ற ஆணையாளர் அறிக்கையினை சமர்ப்பித்து நீதிமன்றம் மறு உத்தரவினை பிறப்பிக்கும்வரை, அக்னி தேவி படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாபி சிம்ஹா மீது தயாரிப்பாளர் கொடுத்த புகார் மீதான விசாரணைக்கு பாபி சிம்ஹாவை தயாரிப்பாளர் சங்கத்தினர் பல முறை அழைத்தும் அவர் ஆஜராகவில்லை. கடைசியாக நேற்றும் அழைக்கப்பட்டார். நேற்றும் பாபி சிம்ஹா வரவில்லை. எனவே அவர் மீது ரெட் போட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.