முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
'முனி', 'பரதேசி', 'காவியத் தலைவன்' உட்பட பல படங்களில் நடித்தும் இன்னும் க்ளிக் ஆகாமலே இருக்கும் நடிகை வேதிகா. பரதேசி படத்தில் நடித்த பிறகு, அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. எனவே தனக்கு முனி படத்தில் வாய்ப்பு கொடுத்த ராகவா லாரன்ஸிடம் வாய்ப்பு கேட்டார் வேதிகா.
அதன் அடிப்படையில் 'முனி 4, அதாவது காஞ்சனா 3' படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் ராகவா லாரன்ஸ். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் அவர் இயக்கியுள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாகிறது.
காஞ்சனா 3' படத்தை தொடர்ந்து உருவாகும் ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வேதிகா. இந்த படத்தில் வேதிகாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் ஆதி சாய்குமார் நடிக்கிறார்.
'அவுரா சினிமாஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை கார்த்தி விக்னேஷ் இயக்குகிறார். வேதிகா 8 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கில் நடிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 25-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறதாம்.