முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
இன்றைய தேதியில் படுபிசியான ஹீரோ யார் என்றால் சந்தேகமில்லாமல் ஜி.வி.பிரகாஷ்குமார் தான். அரை டஜன் படங்களை கையில் வைத்துக் கொண்டு ஒருபுறம் கதாநாயகனாக நடித்துக் கொண்டே, இன்னொருபுறம் தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமின்றி, மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
இவற்றில் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்கும் 'ஜெயில்' படத்தையும், ரவி அரசு இயக்கியுள்ள ஐங்கரன் படத்தையும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கடந்த ஆண்டே முடிவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஜெயில், ஐங்கரன் இரண்டில் எந்தப்படம் முதலில் திரைக்கு வரும்?
இந்தக்கேள்விக்கு விடையாக, 'ஜெயில்' படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகளை துவங்கிவிட்டதாக டுவீட் செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார். இதன்மூலம் ஜெயில் படமே முதலில் வெளியாகும் என தெரிகிறது.
இதற்கிடையில் இன்னொருபுறம் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'அசுரன்' படத்தின் பாடல்களுக்கான ட்யூன்களை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறாராம் ஜி.வி.