Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜமவுலி படத்துக்கு ரசிகர்களின் தலைப்பு

19 மார், 2019 - 13:49 IST
எழுத்தின் அளவு:
Fan-can-decide-the-title

'பாகுபலி', 'பாகுபலி-2' ஆகிய படங்களைத் தொடர்ந்து தெலுங்குப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, தற்போது இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. 'டிவிவி என்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படம், 300 கோடி ரூபாய் செலவில் உருவாகிறது.

ஆந்திராவில் மிகவும் புகழ்பெற்ற அல்லூரி சீதாராம் மற்றும் கோமரம் பீமா என இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தின் கதை 1920-களின் பின்னணியில் நிகழ்கிறது. இந்த படத்தில் அல்லூரி சீதாராமாக ராம்சரண் நடிக்கிறார். கோமரம் பீமாவாக ஜூனியர் என்.டி.ஆர்.நடிக்கிறார்.

இவர்களுடன் பிரபல பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அலியா பட், இங்கிலாந்து நாட்டு நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இவர்களுடன் சமுத்திரக்கனியும் நடிக்கும் இப்படம். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகளில் 2020 ஜூலை மாதம் 30-ஆம் தேதி வெளியாகிறது. அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக "ஆர்ஆர்ஆர்" என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறதாம். அதேநேரம், அந்தந்த மொழிகளுக்கு ஏற்றவாறு படத்தின் தலைப்பு வைக்கப்பட உள்ளதாம்.

இதற்கிடையில், படத்தின் தலைப்பை விரிவாக்கம் செய்து படத்தலைப்புகளை, #RRRTitle என்ற ஹேஷ்டகுடன் ரசிகர்கள் டுவீட் செய்யலாம். அவர்களின் தலைப்பு படத்திற்கு சரியான தலைப்பாக இருந்தால் அதையே படத்தின் தலைபாக சூட்டுவோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விக்ராந்த்திற்கு தோள் கொடுத்த விஜய்சேதுபதிவிக்ராந்த்திற்கு தோள் கொடுத்த ... சூப்பர் டீலக்ஸ் டிரைலரை காப்பியடித்து... சூப்பர் டீலக்ஸ் டிரைலரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in