சிவகார்த்திகேயன், 'யூ டர்ன்!' | முக்கிய கதாபாத்திரத்தில் கவுசல்யா | அடர்ந்த காட்டில் படப்பிடிப்பு! | 'குயின்' அதிரடி திருப்பம்! | சிறப்பான, 'டுவிஸ்ட்!' | நகைச்சுவை கலாட்டா! | கமலை சந்தித்த பிராவோ | 2021ல் ரஜினி கூறிய அதிசயம், அற்புதம் நிகழும் : சத்திய நாராயணராவ் | இந்து மதத்தில் தொடரும் நயன்தாரா | பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர்: நடிகை மஞ்சரி பட்நிஸ் |
விஸ்வாசம் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும், நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அஜித்துடன் வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.
அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் வக்கிலாக நடிக்கிறார் அஜித். இந்த படத்திலும் ஆக்சன் காட்சிகள் உள்ளன. அஜித் வில்லனுடன் மோதும் அதிரடியான சண்டை காட்சியொன்று, தற்போது படமாகி வருகிறது. மழையில் நனைந்தபடி நடித்து வருகிறார் அஜித்.
ஏற்கனவே பலமுறை உடம்பில் அறுவை சிகிச்சை செய்து கொண்டபோதும், டூப் பயன்படுத்தாமல் இந்த சண்டை காட்சியில் அஜித்தே நடித்து வருவதாக செய்திகள் வருகின்றன.