Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடலை போடுவது என்றால் என்ன? இயக்குனர் விளக்கம்

17 மார், 2019 - 13:49 IST
எழுத்தின் அளவு:
director-explained-about-kadalai

சமீபத்தில் போலீஸ் புகார் வரைக்கும் சென்று பரபரப்பு ஏற்படுத்திய படத்தின் தலைப்பு கடலை போட பொண்ணு வேணும். இதில் முதல் வார்த்தையை எடுத்து விட்டு போஸ்டர் அடித்து ஒட்ட... விவகாரம் போலீஸ் வரைக்கும்போனது. போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதியே மன்னிப்பு கேட்டார். இந்தப் படத்தில் அசார், மனிஷா, யோகிபாபு, செந்தில், மன்சூரலிகான் பிக்பாஸ் காஜல் உள்பட பலர் நடித்துள்ளனர். தற்போது கடலை போடுவது என்றால் என்ன என்பது பற்றி படத்தின் இயக்குனர் ஆனந்தராஜன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

படத்தின் நாயகன், சென்னைக்கு கடலைப் போட்டு காதல் செய்வதற்காக நாயகியை தேடி வருகிறார். காதலின் அடிப்படையே கடலைப் போட்டு கல்யாணம் செய்வதுதான் என்பதே கதையின் மையம். காதல் என்பதே புரிதல் தான், இதைத் தான் கடலை என்று விவரிக்கிறோம். என்னுடைய கதாநாயகன் காதலியை கண்டறிந்தாரா? கடலை போட்டாரா? கல்யாணம் செய்தாரா என்பது மீதி கதை.


ஜனரஞ்சகமும் சுவாரஸ்யமும் கலந்த படம். குடும்பத்துடன் சென்று பார்க்ககூடிய படம் என்றால் அது மிகையாகாது. கதையின் இரண்டாவது பாகம் முழுவதும் 'காதலர் தினம் அன்று நடந்த சம்பவங்களை மையமாக கொண்டது. மக்கள் முகம் சுளிக்கும் விதமான எந்த காட்சிகளும் இதில் இடம்பெறவில்லை. காதலித்து கல்யாணம் செய்வதை இலக்காக கொண்ட கதாநாயகனாக அசார் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார். யோகிபாபு வரும் காட்சிகள் திரையரங்கை சிரிப்பால் நிறையவைப்பது உறுதி. கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார். என்கிறார் ஆனந்தராஜன்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாகும் கார்த்திபொன்னியின் செல்வனில் ... இறுதிக்கட்டத்தில் மடை திறந்து இறுதிக்கட்டத்தில் மடை திறந்து

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
19 மார், 2019 - 11:16 Report Abuse
Vasudevan Srinivasan பொதுவாக ஒரு சில படங்களில் சென்சார் சர்டிபிகேட்டுக்கு பிறகு கதையில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.. என்று ஒரு கார்டு போடுவதுண்டு... அதுபோல இந்த படம் வெளிவரும்போது படத்தின் இயக்குனர் கேமராவுக்கு முன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து ஒரு மன்னிப்பு வாசகத்தை போடவேண்டும்..
Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17 மார், 2019 - 18:57 Report Abuse
மலரின் மகள் இந்த வார்த்தையை தமிழகத்திற்கு கொடுத்தது மதுரை அமெரிக்கன் கல்லூரி. ஏறத்தாழ மூன்று டீகேட்கல் ஆகின்றனவாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in