Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாதிக்கப்பட்ட பொள்ளாச்சி பெண்களுக்காக பிரார்த்தியுங்கள்: ராஜ்கிரண் பிறந்த நாள் வேண்டுகோள்

17 மார், 2019 - 12:19 IST
எழுத்தின் அளவு:
rajkiran-pleased-for-pollachi-women

நடிகர் ராஜ்கிரணுக்கு நேற்று பிறந்த நாள். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தால் தான் மகிழ்ச்சியாக இல்லை என்றும் பாதிக்கப்பட்பட்ட பெண்களுக்காக பிராத்தியுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

இறை அருளால், இன்று (நேற்று) எனது பிறந்தநாள். பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் எனக்கு இல்லை. ஆனாலும் முகநூலுக்கு வந்த பிறகு, முகநூல் உறவுகள்,பலரும் வாழ்த்துச் சொல்வதும், இன்பாக்சில், வாழ்த்துக்களைத்தெரிவிப்பதும், அவர்களாகவே டேக் பண்ணி வாழ்த்துக்களைப்பகிர்ந்து கொள்வதும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.


எல்லா முகநூல் உறவுகளுக்கும் தனித்தனியே நன்றி சொல்ல ஆசையிருந்தும் சூழ்நிலை காரணமாக அது முடியவில்லை. "நன்றி" என்ற வெறும் வார்த்தைகளால் உங்களின் அன்புக்கு ஈடுசெய்ய முடியாது. இருந்தாலும் உங்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இதையெல்லாம் விட முக்கியமான ஒரு விசயம், இந்த வருட பிறந்த நாளில் நான் மகிழ்ச்சியாக இல்லை. காரணம் பொள்ளாச்சி சம்பவம். என் மகள் ஜீனத் ப்ரியா, "வாப்பா, இப்படியே இருக்காதீர்கள், என்ன செய்தால் உங்களை இந்த துயரத்திலிருந்து மீட்க முடியும்?" என்று கேட்டார். அதற்கு நான், வ்வளவு அதிகமதிகமாக இறை நாமத்தை உச்சரித்து, அவனிடம் அழுது மன்றாடி, அந்த நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகளின் மனதுக்கு சாந்தியையும், சமாதானத்தையும் கொடுத்து, அவர்கள் புது வாழ்க்கையை துவங்க பிரார்த்திக்கிறீர்களோ, அந்த அளவில் நான் அமைதி அடைவேன் என்று சொன்னேன்.


என் மகள் ஜீனத் ப்ரியா, ஒரு லட்சம் தடவை இறைவனின் திருநாமத்தை உச்சரித்து, அழுது வேண்டுகிறேன் என்று உச்சரிக்க ஆரம்பித்து விட்டார். அதைப்போலவே, முகநூலில் உள்ள என் எல்லா உறவுகளையும் கேட்டுக்கொள்கிறேன், உங்களால் முடிந்த அளவு நீங்கள் வணங்கும் மகா சக்தியிடம், அந்தப்பெண் குழந்தைகளுக்காக அழுது பிரார்த்தனை செய்யுங்கள். என்னை வாழ்த்துவதை விட, நீங்கள் அவர்களுக்காக செய்யும் பிரார்த்தனையே,என்னை மகிழ்ச்சிப்படுத்தும்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அஜீத்தை அரசியலுக்கு அழைக்கும் சுசீந்திரன்அஜீத்தை அரசியலுக்கு அழைக்கும் ... கபடி வீராங்கணைகளுக்கு விருந்து கொடுத்த பாரதிராஜா கபடி வீராங்கணைகளுக்கு விருந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
19 மார், 2019 - 11:11 Report Abuse
Vasudevan Srinivasan மதிப்புக்குரிய திரு.ராஜ்கிரண் அவர்களே பாலியல் பிரச்சினைகளை காசாக்க முயற்சிக்கு சிலருக்கு நடுவே உங்கள் எண்ணம் நிச்சயமாக மிகப்பெரும் பாராட்டுக்குரியது.. இந்த தருணத்தில் உங்களின் நீண்டகால ரசிகன் என்கிற முறையில் ஒரு வேண்டுகோள்.. உங்களது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் இப்படிப்பட்ட பிரச்சனைகளை கதை கருவாக வைத்து ஒரு நல்ல படத்தை தரவேண்டும் அதுவும் உங்களது ஆஸ்தான இசைஞானி அவர்களுடன் இணைந்து.. உங்களை போன்றவர்கள்தான் இப்படிப்பட்ட பிரச்சினையை 'உணர்ச்சிகளை' தூண்டும் வகையில் இல்லாமல் 'உணர்வுகளை' எழுப்பும் வகையில் ஆபாசமில்லாமல் திரைக்கு கொண்டுவரமுடியும்.
Rate this:
18 மார், 2019 - 09:59 Report Abuse
மதுவந்தி உணர்வுகளில் வேதனை சத்திய வார்த்தைகள். தவறு இழைத்தவர்கள் பெற்றொர்களுக்கு தெரியாமல் சுநந்திரம் என்று நினைத்து அறிவு கெட்டதனமாக இறைவனுக்கும் தெரியாது? என்று நினைத்து தவறிழைத்து விட்டனர். இவர்களுக்காக தங்களை போல் பிரார்த்தனை செய்வோம் பாதிக்கப்பட்ட சகோதரிகள் சகஜ நிலைக்கு வருவதற்கு.
Rate this:
Tamil - Trichy,இந்தியா
17 மார், 2019 - 16:09 Report Abuse
Tamil யு ஆர் கிரேட் மேன்.
Rate this:
s t rajan - chennai,இந்தியா
17 மார், 2019 - 13:57 Report Abuse
s t rajan அது மட்டும் போராது. இனி இந்த மாதிரி பெண்கள் தங்கள் பெற்றோரை மதியாவண்ணம் முன்பின் தெரியா நபர்களுடன் தனிமையில் போவதைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் இல்லங்களில் விட்டு வெளியிடங்களுக்குத் தகுந்த பாதுகாப்பின்றி செல்லக் கூடாது. ஆண் பிள்ளைகளுயும் பெற்றோர் கள்ளக் காளைகள் மாதிரி அலைய விடக்கூடாது. இந்த மாதிரி பிள்ளைகளைப் பெற்று வளர்த்த தாய் தந்தையருக்கும் உடனடி சிறை தண்டனைத் தரப்பட வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in