Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ஆலியா பட்

16 மார், 2019 - 17:21 IST
எழுத்தின் அளவு:
Alia-Bhatt-eager-to-act-in-RRR-Film

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, அஜய் தேவகன், ஆலியா பட், டெய்ஸி மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு, வியாழனன்று, ஐதராபாத்தில் நடைபெற்றது. அன்றுதான் அஜய் தேவகன், ஆலியா பட், டெய்ஸி ஆகியோர் படத்தில் நடிப்பதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ஹிந்தி நடிகரான அஜய் தேவகன், நடிகையான ஆலியா பட் முதல் முறையாக தெலுங்குப் படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்திற்காக நீண்ட நாட்களாக பல முன்னணி ஹிந்தி நடிகைகளிடம் பேசி வந்தார்கள். கடைசியில் ஆலியா பட் தான் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடிக்க இருப்பது பற்றி ஆலியா கூறுகையில், “இப்போது படத்திற்காக தயாராகி வருகிறேன். படத்தைப் பற்றி நான் எதுவும் கூற முடியாது. உண்மையில் இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் சிறப்பான உணர்வை தருகிறது. ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைவேற உள்ளது. அதற்கு மகத்தான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தென்னிந்திய மொழிப் படம் ஒன்றில் முதல் முறையாக நடிக்க இருப்பதால் மிகவும் உற்சாகமாக உள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்டப் படமாக தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகள் மற்றும் வேறு சில இந்திய மொழிகளிலும் வெளியாக உள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் 2020 ஜுலை 30ம் தேதி வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.100 கோடி பேரம் : மசியாத ராஜமவுலி பட தயாரிப்பாளர்ரூ.100 கோடி பேரம் : மசியாத ராஜமவுலி பட ... தெலுங்கு நடிகர் மீது தாக்குதல்: நடந்தது என்ன? விமல் விளக்கம் தெலுங்கு நடிகர் மீது தாக்குதல்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in