Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.100 கோடி பேரம் : மசியாத ராஜமவுலி பட தயாரிப்பாளர்

16 மார், 2019 - 17:07 IST
எழுத்தின் அளவு:
Rajamouli-Producer-offer-for-Rs.100-crore

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம், இந்திய சினிமாவை உலக சினிமா தரத்திற்கு கொண்டு சென்றவர் இயக்குனர் ராஜமவுலி. அந்த படத்தைத் தொடர்ந்து தற்போது ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன் ஆகியோரை வைத்து 'ஆர்ஆர்ஆர்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை டிவிவி தனய்யா என்பவர் சுமார் 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இவர்தான் மகேஷ் பாபுவின் 'பாரத் அனே நேனு' மற்றும் ராம்சரணின் 'வினய விதேய ராமா' ஆகிய படங்களைத் தயாரித்தவர்.

தற்போது ராஜமவுலி படத்தை இவர், தயாரிக்க ஆரம்பித்த நிலையிலேயே, வேறு ஒரு தயாரிப்பாளர் தான் நூறு கோடி ரூபாய் தருவதாகவும், அந்த படத்தை தன்னிடம் ஒப்படைத்துவிட்டு விலகி கொள்ளுமாறும் இவரிடம் பேரம் பேசினாராம். ஆனால் ராஜமவுலி படம் தயாரிப்பது என்பது ஒரே ஒருமுறை கிடைக்கும் வாழ்நாள் வாய்ப்பு என்பதால் அதை தவறவிட தான் தயாராக இல்லை என உறுதியாக கூறி விட்டாராம் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா. படத்தை தயாரிக்காமலேயே 100 கோடி ரூபாய் லாபத்தை ஒதுக்கித்தள்ளிய இவரின் செயல் தெலுங்கு திரையுலகில் தற்போது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கவுதம் மேனன் படப்பிடிப்பை நிறைவு செய்த இந்திரஜித்கவுதம் மேனன் படப்பிடிப்பை நிறைவு ... ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ஆலியா பட் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க ஆர்வமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

nicolethomson - bengalooru,இந்தியா
17 மார், 2019 - 20:33 Report Abuse
 nicolethomson நம்பனும்
Rate this:
tamilan -  ( Posted via: Dinamalar Android App )
17 மார், 2019 - 16:10 Report Abuse
tamilan RRR - super dooper flop
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in