ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பர்களுடன் போலீசாரை தாக்கியதாக பிக்பாஸ் ஜூலி குறித்து ஒரு தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து ஜூலியை சோஷியல் மீடியாவில் பலரும் தகாத வார்த்தைகளால் வசைபாடி வருகிறார்கள்.
ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்த ஜூலி, “உங்கள் வீட்டில் சகோதரிகள் இல்லையா..? அவர்களை இப்படித்தான் பேசுவீர்களா..? நான் உங்களை தனிப்பட்ட முறையில் ஏதாவது துன்புறுத்தினேனா..? இரண்டு வருடத்திற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே ஒரு பொய் சொன்னேன் என்பதற்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா..? என்னை குற்றம் சாட்டும் நீங்கள் யாரும் வாழ்க்கையில் ஒரு பொய் கூட சொன்னது இல்லையா..? முதலில் ஒரு பெண்ணிடம் எப்படி பேச வேண்டும் என கற்றுக் கொள்ளுங்கள்” என ஆவேசமாக கொந்தளித்துள்ளார் ஜூலி.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்ற இன்னொரு போட்டியாளரான காயத்ரி ரகுராம், இப்படி அவதூறு பரப்புபவர்கள் மீது போலீசில் புகார் அளிக்குமாறு ஜூலிக்கு ஆலோசனை கூறியுள்ளார். மேலும் இது போன்ற மூளையில்லாத மோசமான நபர்களிடம் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று ஜூலிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் காயத்ரி ரகுராம்.