ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
விஷாலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஆர்யாவுக்கு, கடந்தவாரம் நடிகை சாயிஷாவுடன் திருமணம் இனிதே முடிந்தது. அடுத்ததாக விஷாலும், திருமணத்திற்கு தயாராகிவிட்டார். விஷால், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவை திருமணம் செய்ய இருக்கிறார்.
இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் இன்று(மார்ச் 16) சிறப்பாக நடந்தது. ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த, நிச்சயதார்த்த நிகழ்வில் இரு குடும்பத்தினரும், விஷாலின் நெருக்கமான நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர். திரையுலகினர் சிலரும் பங்கேற்றனர். குறிப்பாக நடிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. நடிகர் சங்க கட்டடத்தில் தான் தனது திருமணம் நடக்கும் என விஷால் அறிவித்திருந்தார். அதன்படி நடிகர் சங்க கட்டடம் பணிகள் நிறைவை பொறுத்து திருமண தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.