Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு, கன்னடத்தில் தோல்வியடைந்த 'விஸ்வாசம்'

16 மார், 2019 - 15:00 IST
எழுத்தின் அளவு:
Viswasam-fails-in-Telugu-and-Kannadam

சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க தமிழில் கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி வெளிவந்த படம் 'விஸ்வாசம்'. ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'பேட்ட' படத்திற்குப் போட்டியாக வெளிவந்தாலும் வசூலில் முதலிடத்தைப் பிடித்தது 'விஸ்வாசம்'. அஜித் நடித்து வெளிவந்த படங்களிலேயே இந்தப் படத்திற்குத்தான் அதிகமான வசூல் என்று கோலிவுட்டில் கூறினார்கள்.

இந்தப் படம் தெலுங்கில் அதே பெயரில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 1ம் தேதியன்று வெளியானது. 'ஜகமல்லா' என்ற பெயரில் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 7ம் தேதியன்று வெளியானது. ஆனால், தமிழில் சாதனை வெற்றியைப் புரிந்த இந்தப் படம் தெலுங்கு, கன்னடத்தில் தோல்வியைச் சந்தித்தது.

தமிழில் முன்னணி ஹீரோக்களாக உள்ளவர்களில் மற்றவர்களைப் போல அஜித்தால் தெலுங்கில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை இதுவரை பெற முடியவில்லை. 'விஸ்வாசம்' படமாவது அந்த வெற்றிக் கணக்கை ஆரம்பித்து வைக்கும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை. அடுத்து அஜித் நடித்து வெளிவர உள்ள 'நேர் கொண்ட பார்வை' படமாவது தெலுங்கில் வெற்றிக் கணக்கை ஆரம்பிக்கட்டும்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
சரியான நபர் கிடைத்தால் நாளையே திருமணம் : த்ரிஷாசரியான நபர் கிடைத்தால் நாளையே ... விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் கோலாகலம் விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20 மார், 2019 - 06:46 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தமிழ்லே மட்டும் என்ன வாழுதாம்? ஃப்ரீயா HD பிரதி கிடைத்தும் கூட, வீட்டில் ஹாயாக உட்கார்ந்து surround sound tem, 65 inch TV இருந்தும், முழு படத்தை பார்த்து முடிப்பதற்குள் மூளையே கலங்கிப் போச்சி.. பேட்ட was lot better.
Rate this:
RAJESH - Pondicherry ,இந்தியா
19 மார், 2019 - 11:07 Report Abuse
RAJESH தமிழ்ல அந்த படம் வெற்றினு யார் சொன்னது...தினமலர் ஏன் இப்படி ...
Rate this:
Susi - ,
17 மார், 2019 - 10:01 Report Abuse
Susi ஏன்டா சுட்ட எடத்திலேயே கொண்டுபோய் உங்க வியாபாரத்த காட்டுனா😄😄😄😄😄
Rate this:
16 மார், 2019 - 19:48 Report Abuse
விஜய் சூப்பர் ஸ்டார் என்றும் சூப்பர் ஸ்டார் தான் வசூலிலும் சரி மனிதாபிமானத்திலும் சரி
Rate this:
Sanakkiyan - Erode,இந்தியா
16 மார், 2019 - 18:00 Report Abuse
Sanakkiyan நீங்களா வெற்றி வெற்றி னு கூவுங்க
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in