Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூப்பர் டீலக்ஸ் - பாராட்டும் அனுராக் காஷ்யப்

16 மார், 2019 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Anurag-kashyap-congrats-Super-Deluxe-film

'ஆரண்ய காண்டம்' படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தை பிரபல ஹிந்தி இயக்குனரும், 'இமைக்கா நொடிகள்' படத்தின் வில்லன் நடிகருமான அனுராக் காஷ்யப் பாராட்டியுள்ளார்.

இது குறித்து டுவிட்டரில், “குமாரராஜாவின் 'சூப்பர் டீலக்ஸ்' படம் பார்த்தேன். அட்டகாசம், கொண்டாடுவதற்கு நிறைய உள்ளது. படத்தைப் பார்த்த பின் அந்தப் படத்தில் ஒரு பகுதியாக நான் இல்லாமல் போனது, மேலும் அதிகமாக வருத்தப்பட வைத்துள்ளது. குமாரராஜா ஒரு நாணமற்ற, பயமற்ற, பல தந்திரங்களைக் கொண்ட இயக்குனர். சில விஷயங்களைச் சொல்ல உரிமை இல்லை, ஆனால் வரும் போது, வெறுமனே பார்க்க வேண்டாம்,” எனக் கூறியுள்ளார்.

'சூப்பர் டீலக்ஸ்' படத்தை தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். அனுராக் காஷ்யப்பையும் எழுதக் கேட்டுக் கொண்டார் குமாரராஜா. ஆனால், அவரால் வேறு வேலைகள் காரணமாக எழுத முடியாமல் போனது. அது பற்றி இப்போது வருத்தப்பட்டிருக்கிறார் அனுராக்.

சூப்பர் டீலக்ஸ் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'இந்தியன் 2' நோ, 'ஆர்ஆர்ஆர்' ஓகே சொன்ன அஜய் தேவகன்'இந்தியன் 2' நோ, 'ஆர்ஆர்ஆர்' ஓகே ... சின்மயி நீக்கம் : தடை விதித்த நீதிமன்றம் சின்மயி நீக்கம் : தடை விதித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in