உணர்ச்சிக் குவியலாய் வந்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் | ‛பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீடு கோலாகலம் : சிவப்பு கம்பள வரவேற்பில் நனைந்த திரைப்பிரபலங்கள் | டப்பிங் யூனியன் சீல் அகற்றம் | ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்ட கீரவாணி | விடுதலை படம் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது : பவானி ஸ்ரீ | மார்ச் 31ல் ஆர்யாவின் அடுத்த பட டீசர் வெளியீடு | மீண்டும் சர்ச்சையில் நாக சைதன்யா, ஷோபிதா காதல் | போலா 2ம் பாகத்திற்கு லீட் கொடுத்த அபிஷேக் பச்சனின் சர்ப்ரைஸ் என்ட்ரி | இளையராஜா இசையில் ஹிந்தியில் உருவான மியூசிக் ஸ்கூல் | இறப்பதற்கு முன் மஞ்சு வாரியரிடம் இன்னொசென்ட் சொன்ன கடைசி வார்த்தை |
தெலுங்குத் திரையுலகின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. தெலுங்கிலிருந்து ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஹிந்தியிலிருந்து அஜய் வேகன், ஆலியா பட், தமிழிலிருந்து சமுத்திரக்கனி, இங்கிலாந்திலிருந்து டெய்ஸி என பல மொழி நடிகர்கள் நடிக்க, இந்தப் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் ஹிந்தி நட்சத்திரங்கள் இல்லாதது பற்றி பலரும் குறிப்பிட்டிருந்தார்கள். ஹிந்தி நட்சத்திரங்கள் இருந்திருந்தால் படம் இன்னும் அதிகமான வசூலைப் பெற்றிருக்கும் என்றார்கள். அதனால்தான் இப்போது 'ஆர்ஆர்ஆர்' படத்தில் அஜய்தேவகன், ஆலியா பட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்க உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தில் நடிக்க அஜய் தேவகனை ஏற்கெனவே கேட்டிருந்தார்கள். ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆசைதான், ஆனால், தேதிகள் இல்லையென அவர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இது கடந்த மாதம் நடந்தது.
இப்போது ராஜமவுலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடிக்க அஜய் தேவகன் சம்மதம் சொல்லியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஷங்கர் படத்தைவிட ராஜமவுலி படத்தில் நடிப்பதைத்தான் அவர் அதிகம் விரும்பி உள்ளார் என டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.