உணர்ச்சிக் குவியலாய் வந்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் | ‛பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீடு கோலாகலம் : சிவப்பு கம்பள வரவேற்பில் நனைந்த திரைப்பிரபலங்கள் | டப்பிங் யூனியன் சீல் அகற்றம் | ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்ட கீரவாணி | விடுதலை படம் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது : பவானி ஸ்ரீ | மார்ச் 31ல் ஆர்யாவின் அடுத்த பட டீசர் வெளியீடு | மீண்டும் சர்ச்சையில் நாக சைதன்யா, ஷோபிதா காதல் | போலா 2ம் பாகத்திற்கு லீட் கொடுத்த அபிஷேக் பச்சனின் சர்ப்ரைஸ் என்ட்ரி | இளையராஜா இசையில் ஹிந்தியில் உருவான மியூசிக் ஸ்கூல் | இறப்பதற்கு முன் மஞ்சு வாரியரிடம் இன்னொசென்ட் சொன்ன கடைசி வார்த்தை |
ரசிகா என்ற பெயரில் தன் சினிமா கேரியரை ஆரம்பித்தவர் சங்கீதா. சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தென்னிந்திய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கிய பிதாமகன் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அதன்பிறகு அவர் நடித்த உயிர் படம் மேலும் பிரபலமாக்கியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு நடிப்பதையும் குறைத்துக் கொண்டார். கடந்த 2 ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
விஜய் ஆண்டனி நடிக்கும், தமிழரசன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதில் ரம்யா நம்பீசன் ஹீரோயின், சோனுசூட் வில்லன், யோகி பாபு, ரோபோ சங்கர் காமெடியன்கள். தமிழரசனில் நடிப்பது பற்றி சங்கீதா கூறியதாவது :
எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே ஒதுக்கி விட்டு ஒதுங்கி இருந்தேன். இந்தப்படத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விதமாக இருந்ததால் ஒத்துக் கொண்டேன். மிகப்பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம். இதில் என் கதாபாத்திரம் பவர் புல்லானது. என்றார்.