Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹவுஸ் ஓனர் ரிலீசுக்கு ரெடி

16 மார், 2019 - 10:29 IST
எழுத்தின் அளவு:
House-owner-ready-to-release

அம்மா நடிகையாக இருந்து இயக்குனரானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி படங்களை இயக்கியவர், அடுத்து இயக்கி இருக்கும் படம் ஹவுஸ் ஓனர். பசங்க படத்தில் நடித்த கிஷோரும், ஆடுகளம் கிஷோரும் இணைந்து நடித்துள்ளனர். விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது:

ஹவுஸ் ஒனர் என்ற தலைப்பு பார்த்ததும் சிலருக்கு இது வாடகை வீட்டு பிரச்னையை பேசும் படமாக தோன்றாலாம். இது முழுக்க முழுக்க காதல் கதை. ஒரு தம்பதிகளின் காதல் எப்படி அவர்களின் கடைசி காலம் வரை இணைந்திருக்கிறது என்பதை சொல்கிற படம். படத்தை பார்த்தவர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டும், மரியாதையும் அளவிட முடியாது.

'ஆடுகளம்' கிஷோர் இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார். பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் நடிப்பை பார்த்தவுடன், நடிப்புப் கூட பரம்பரை சொத்துதான் என கருத்து தோன்றும். எனது தோழி விஜயலக்ஷ்மியும், அவளது சகோதரி சரிதாவும் லவ்லினுடைய திறமையை எண்ணி பெருமைப்படலாம். 'பசங்க திரைப்படத்தின் மூலமாக தேசியவிருது பெற்றவரும், 'கோலிசோடா படத்தில் மிக பிரமாண்டமாக நடித்திருந்த கிஷோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நாம் சராசரி வாழ்வில் சந்திக்கும் ஒரு அம்மாவை ஶ்ரீரஞ்சனி பிரதிபலித்திருக்கிறார். தரமான நல்ல கதைகள் திறமையான நடிகர்களை தானே தேடிக்கொள்ளும் என்பதில் எனக்கு இங்கேதான் நம்பிக்கை பிறக்கிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற கலைஞனுடன் இந்தப் படத்தில் பணியாற்றியதில் பெருமிதம் கொள்கிறேன். மதன் கார்க்கி மற்றும் அனுராதா பாடல் வரிகளை இயற்றியுள்ளார். பாடல்களுக்கு உயிருட்டும் விதமாக சின்மயி, சத்யபிரகாஷ் மற்றும் பென்னி தயாள் பாடியுள்ளனர்.

'மகளிர் மட்டும் புகழ் பிரேம், சிறந்த முறையில் எடிட்டிங் செய்துள்ளார். கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவாளராகவும், தபஸ் நாயக் ஆடியோகிராபியும் கையாண்டுள்ளனர். இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன, அந்த வரிசையில் இந்தப்படமும் வெற்றிபெறும் என நம்புகிறேன். என்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மகாபாரதம் எனது கடைசி படம் : ராஜமவுலிமகாபாரதம் எனது கடைசி படம் : ராஜமவுலி பேயாக யோகி பாபு பேயாக யோகி பாபு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 மார், 2019 - 13:45 Report Abuse
Vasudevan Srinivasan உண்மையை சொன்னால் நான் உங்கள் (திருமதி. லட்சுமி ராமகிருஷ்ணன்) இயக்கத்தில் எந்த படத்தையும் பார்த்ததில்லை ஆனால் உங்கள் மீது அபார நம்பிக்கை உள்ளது உங்கள் படங்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.. இந்த முறை தவறவிடாமல் உங்கள் படத்தை (ஹவுஸ் ஓனர்) பார்த்துவிடுவேன்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in