Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சம்பளத்தைக் குறைக்க மறுக்கும் 'ரா.கி' நடிகர்

15 மார், 2019 - 15:33 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக நடிப்பவர்களுக்குப் பஞ்சமில்லை. ஹீரோயின்களுக்கும் பஞ்சமில்லை. நகைச்சுவை நடிகர்களுக்கும், குணச்சித்திர நடிகர்களுக்கும்தான் பஞ்சம். நகைச்சுவை நடிகர்கள் ஹீரோக்களாக ஆசைப்பட்டதால் இப்போது அந்த இடத்தை நிரப்ப யாருமே இல்லை.

குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஒரு சில நடிகர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களில் பல இயக்குனர்கள் விரும்பும் நடிகராக இருப்பவர் 'ரா.கி' நடிகர். அவருக்குப் பெண்கள் மத்தியிலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் தனி இடம் உண்டு. எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடிக்கக் கூடியவர்.

இருந்தாலும், அவர் கேட்கும் சம்பளத்தைக் கேட்டு பல இயக்குனர்கள் பின்வாங்கிவிடுகிறார்களாம். ஒரு படத்தில் நடிக்க 3 கோடி கேட்கிறாராம். அதிலிருந்து கொஞ்சம் கூட குறைத்துக் கொள்ள மாட்டேன், வீட்டில் இருந்தாலும் பரவாயில்லை என்கிறாராம். நல்ல நடிகர், மனிதர், சினிமாவின் அனைத்து கஷ்ட, நஷ்டங்களையும் தெரிந்தவர். சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு நடித்தால் பல புது இயக்குனர்களின் கனவுகள் நனவாகும், சில நல்ல படங்களும் உருவாகும், ஆனால், அவர் மனது வைக்க மாட்டேன் என்கிறார் என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை மாறிய கதைநடிகை மாறிய கதை சீரியலுக்கு குட்பை சீரியலுக்கு குட்பை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
19 மார், 2019 - 11:35 Report Abuse
Vasudevan Srinivasan நேத்துவந்த காமெடி நடிகருக்கெல்லாம் அள்ளிக்கொடுக்க தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள் திறமைமிக்க முக்கிய நடிகருக்கு அதுவும் திரு.ராஜ்கிரண் அவர்களுக்காகவே படம் பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் எனும்போது அவருக்கு அவர் கேட்கும் சம்பளத்தை கொடுப்பதில் என்ன தவறு..
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
16 மார், 2019 - 04:02 Report Abuse
meenakshisundaram உண்மைதான் ,சம்பள விஷயத்தில் அட்ஜஸ்ட் செயது கொண்டு போனாலே நல்லது. வயதான வேஷத்தில் நடிக்க இப்போதும் கூப்பிடுவார்கள் .ஆனால் உண்மையிலேயே இன்னும் வயதாகி விட்டால்?ஒன்று கூப்பிடவே மாட்டார்கள் அல்லது இன்னும் திறமையானவர்கள் வரக்கூடும்?
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
15 மார், 2019 - 18:05 Report Abuse
Mirthika Sathiamoorthi ஒருமுறை ஒரு இயக்குனர் ரா.கி கிட்ட இது பற்றி கேட்டபோது வயதான கதாபாத்திரத்தில் நடிக்க கோடியில் கேக்கும் நடிகர்களில் நான் ஒருவன்...லட்சத்தில் கேக்கும் நடிகர்களும் சில ஆயிரங்கள் கேக்கும் நடிகர்களும் இருக்கும் போது உங்கள் பட்ஜெட்டுக்கேற்ப நடிகர்களை புக் பண்ண வேண்டியதுதானே உங்களுடைய பட்ஜட்டுக்கேற்ப என்னுடைய சம்பளத்தை குறைத்துக்கொள்ள சொல்வதா? நான்தான் நடிக்கவேண்டும் என்றால் நான் கேட்பதை கொடுங்கள்....உங்களால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை வாங்கும் நடிகரிடம் நில்லுங்கள் என்றார் ( கனா முதலில் ரா.கி இடம் சென்று சம்பளத்தால் புரட்சி தமிழனிடம் வந்தது...படம் ஒன்னும் தோல்வி அடையாலயே.) ... கதைக்கு உதவாத கவர்ச்சி ஆட்டத்துக்கு சன்னி லியோன் பல கோடி சம்பளம்.... அவரிடம் இதே கருத்தை சொல்லவேண்டியதுதானே? பெட்ருமாஸ் லைட்டேதான் வேணுமா?
Rate this:
VSK - CARY,யூ.எஸ்.ஏ
15 மார், 2019 - 15:54 Report Abuse
VSK ராஜ் கிரண்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in