Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண்கள் குரல் கேட்கவில்லையா மிஸ்டர் சிஎம்.? - கமல் ஆதங்கம்

15 மார், 2019 - 13:57 IST
எழுத்தின் அளவு:
Pollachi-Issue-:-Kamal-angry-speech.?

பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து, அதை வீடியோ எடுத்து, மிரட்டி பாலியல் சம்பவங்களை அரங்கேற்றிய கொடூரம் நடந்தேறி உள்ளது. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்சம்பவத்தில் குற்றவாளிகள் கடுமயைாக தண்டிக்கப்பட வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளன. இதுதொடர்பாக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டமும் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக அரசு என்ன செய்தது.? என தனது ஆதங்கத்தை, இரு பெண் பிள்ளைகளின் அப்பாவாக கேள்வி கேட்டுள்ளார். வீடியோவில் அவர் பேசிய விபரம் வருமாறு...

பெண்ணைப் பெற்றவர்கள் பதறுகிறார்கள்
அந்த பொண்ணு அலறியதிலிருந்து மனது பதறுகிறது. பெண்ணின் குரலில் இருந்த அதிர்ச்சி, பயம், நண்பன் என்று சொன்னவன் தன்னை காப்பாற்றி அழைத்து செல்ல மாட்டானா என்கிற தவிப்பு கண்மூடும் ஒவ்வொரு நொடியும் காதில் கேட்கிறது.

நிர்பயாவுக்கு நடந்த கொடுமைக்கு எதிராக ஊர் உலகமே ஒன்றாக திரண்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் ஒரு அறிக்கை விட்டார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கொடூரக் குற்றங்களாக கருதப்பட்டு, உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றார். அந்தப் பெண்மணியின் பெயரால் ஆட்சி செய்யும் இந்த அரசு, எப்படி இவ்வளவு கவனக்குறைவாகவும், மெத்தனமாகவும் இருக்கிறது. பெண்ணைப் பெற்ற அனைவரும் பதறுகிறார்கள். உங்களுக்குப் பதறவில்லையா.?

வீடியோ வெளிவந்தது எப்படி.?
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்கிற மும்முரம், குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக தண்டனை உறுதி என தமிழக மக்களுக்கு சொல்வதில் இல்லையே ஏன்.? புகார் கொடுக்க வந்த பெண்ணின் பெயரை எஸ்.பி. தவறுதலாக கூறிவிட்டாராம். சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலுக்கு எதிராக அவர் செய்த தவறை பார்த்து அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. அடுத்த இரண்டு நாளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ வெளிவருகிறது எப்படி.? குற்றவாளிகள் அழித்து விட்டதாக சொன்ன வீடியோ எப்படி வெளியே வந்தது. முதலில் வந்த பாதி மறைக்கப்பட்ட வீடியோ வெளியே வந்தது எப்படி.. யார் வெளியிட்டது, என்ன காரணம்.?

பெண்கள் குரல் கேட்கவில்லையா மிஸ்டர் சிஎம்
பெண்களின் தலைமை பாதுகாக்கிறேன் என்று சொன்னவரின் போட்டோவை பாக்கெட்டில் வைத்து கொண்டு இருக்கும் நீங்கள், பெண்களின் அநியாயத்திற்காக என்ன செய்துள்ளீர்கள். தங்களது கோபத்தை வெளிப்படுத்த மாணவர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தியிருக்கிறீர்கள். பெண்களை வன்முறை உபயோகித்து பயமுறுத்த முயற்சி செய்துள்ளீர்கள். நேர்மையான முறையில் கோபத்தை பதிவு செய்ய வந்த மாணவிகளிடம் முறைதவறி நடந்து கொள்ளும் இந்த காவல் துறையா எங்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போகிறது என்று எங்களது பெண்கள் கேட்பது உங்களுக்கு கேட்கவில்லையா மிஸ்டர் சிஎம்., இந்த கேள்வி எல்லாம் உங்களுக்கு.

அப்பாவாக கேட்கிறேன்

பெயரைச் சொல்கிறீர்கள்.. வீடியோ வெளியிடுகிறீர்கள்.. இதைத் தட்டிக் கேட்டால் போலீஸை விட்டு அடிக்கிறீர்கள். ஆனால் உங்கள் ஆட்சி ஒரு பெண்ணின் பெயரால் நடக்கிறது என்று கூறுகிறீர்கள். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உள்ளது. மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராக கேட்கவில்லை, 2 பெண்ணின் அப்பாவாக கேட்கிறேன். என்ன செய்து இந்த தவறுகளுக்கான பரிகாரம் செய்ய போகிறீர்கள்.

என்ன பதில் சொல்ல போகிறீர்கள்.?
எந்த பொண்ணும் புகார் கொடுக்க வரக்கூடாது என்பதற்காக வீடியோ வெளியிட்டு மிரட்டுகிறீர்களோ என பயப்படும் சகோதரிகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள். கட்சி பாகுபாடுகள் தாண்டி, இந்த கொடூர காரியத்தை செய்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கப்போகும் கடுமையான தண்டனையை பொறுத்தே, பெண்களுக்கு எதிராக யாரேனும் கொடூரங்கள் செய்தால் அரசாங்காம் விடாது என்ற நம்பிக்கையை எப்போது கொடுக்க போகிறீர்கள். இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள், தேர்தல் நடந்து முடிக்கட்டும் என்றா.?

அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானம்

நம் நாட்டின் இரு பெரும் காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க ஏற்பட்ட போர். தன் மனைவிக்கு ஒன்று என்றால் போருக்கு புறப்பட்ட கடவுள்கள் வாழ்ந்த இந்த நாட்டில் உங்கள் அம்மாவுக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை எப்படி துடைக்க போறீங்க சாமி.?

இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (41) கருத்தைப் பதிவு செய்ய
அலிஸில் இணைந்த லைலாஅலிஸில் இணைந்த லைலா சுதந்திரப் போராட்டப் படங்களில் அப்பா, மகன் சுதந்திரப் போராட்டப் படங்களில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (41)

vadivel - bhavani,இந்தியா
18 மார், 2019 - 12:08 Report Abuse
vadivel பெண்கள் குரல் மட்டும் அல்ல, ஆண் குரலும்கூட கேட்டது,, நாம செய்யற இந்தகாரியம் சமுதாயத்தில் எப்படி விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் செய்வது, பிறகு ஊருக்கு உபதேசம் செய்வது. வெட்கம்.
Rate this:
Voice -  ( Posted via: Dinamalar Android App )
17 மார், 2019 - 01:47 Report Abuse
Voice so, who can ask these questions? Buddha and Gandhi?
Rate this:
raja -  ( Posted via: Dinamalar Android App )
16 மார், 2019 - 11:22 Report Abuse
raja bad comments
Rate this:
SUNA PAANA - Chennai,இந்தியா
16 மார், 2019 - 11:04 Report Abuse
SUNA PAANA பெண்களை பற்றி பேசுவதுற்கு இவர் தகுதியானவர் தானா என்கிற கேள்வி எழுகிறது. முதலில் வாணியை தூக்கியெறிந்தார் பின்பு சரிகாவை கீழே தள்ளினார் அப்புறம் சிம்ரனை கைகழுவினார் அத்துடன் நிற்காமல் கௌதமியை துரத்திஅடித்தார். இப்போதோ ஸ்ரீப்ரியாவுடன் கூத்தடித்துக்கொண்டு இருக்கிறார். தன் இளம்வயதில் ஜெயசுதா மற்றும் ஸ்ரீவித்யா அவர்கள் வாழ்க்கையிலும் விளையாடினார். சீ சீ கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணை தன்மானம் இல்லாதவர்.
Rate this:
g.mohan - Manama,பஹ்ரைன்
16 மார், 2019 - 10:45 Report Abuse
g.mohan kamal says correct. our Mr.CM suppose to comment. Not we are all... Kamal have 3 wife's that is his capacity. He is good tax paid person. No any bad habits. knowledgeable person , hard worker.. and bold person. not like EPS,OPS, Stalin and others.i not support kamal we have to thing about true. he stand alone.
Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in