Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.15 கோடியில் தயாராகும் கென்னடி கிளப்

15 மார், 2019 - 13:03 IST
எழுத்தின் அளவு:
Kennedy-Club-made-in-Rs.15-crore-budget

கபடி விளையாட்டை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கிய முதல் படம் வெண்ணிலா கபடி குழு. தற்போது பெண்கள் கபடியை மையமாக வைத்து அவர் உருவாக்கி வரும் படம் கென்னடி கிளப். பாரதிராஜா, சசிகுமார், காயத்ரி, சூரி, சின்னத்திரை நடிகை மீனாட்சி ஆகியோர் நடிக்கிறார்கள். இதுதவிர சவுந்தர்யா, நீது, சவுமியா, ஸ்மிருதி, ருத்து குமார் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இமான் இசை அமைக்கிறார், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

சுசீந்திரன், தனது நல்லுசாமி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கிறார். சுசீந்திரன் இயக்கிய, தயாரித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம். அதாவது 15 கோடி ரூபாய் செலவில். தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.

இறுதிக் கட்ட படப்பிடிப்பு, விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் இருந்து 16 கபடி குழுக்கள் வந்துள்ளது. ஹரியானா, டில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர், போன்ற இடங்களிலிருந்து கபடி குழுக்கள் வந்துள்ளது. நிஜ வீரர்களை கொண்டே படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏறத்தாழ 300 வீரர்கள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.

படப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் வடஇந்தியாவில் நடப்பது போல் பிரத்யேகமாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.2 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. இறுதிக்கட்ட காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ போட்டியாகவே நடத்தி படப்பிடிப்பை பதிவு செய்து வருகிறார்கள் பட குழுவினர்.

இறுதிப்போட்டியை காண ஏராளமானோரை வரவழைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட காட்சிகளுக்கு மட்டும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடந்துகிறார்கள். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் பாடல்கள் படமாக்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பொள்ளாச்சி சம்பவம் : எழுத்தாளர் சங்கம் கண்டனம்பொள்ளாச்சி சம்பவம் : எழுத்தாளர் ... ஜோம்பியில் மருத்துவ கல்லூரி மாணவியாக யாஷிகா ஜோம்பியில் மருத்துவ கல்லூரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in