Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

கவர்ச்சி வேண்டாம் என்றால் கண்ணை மூடிக்கொள்ளுங்கள் : ராய் லட்சுமி

15 மார், 2019 - 00:20 IST
எழுத்தின் அளவு:
Do-not-be-glamorous--Close-your-eyes!

சிறிய இடைவேளைக்குப் பின், ராய் லட்சுமி மீண்டும், தமிழில் கவனம் செலுத்த
துவங்கி உள்ளார். அவர் நடிப்பில், அடுத்ததாக, நீயா - 2 படம் வெளிவர தயாராக உள்ளது. அவருடன் பேசியதிலிருந்து:


நீயா - 2 எந்த மாதிரியான படம்?


இந்த படத்தில், எனக்கு பாம்பு சம்பந்தப்பட்ட பாத்திரம். இரண்டு, கெட்டப் உண்டு. பெரிய சஸ்பென்ஸ் இருக்கும். மூன்று காலகட்டத்தில் கதை இருப்பதால், மூன்று நாயகியர் நடித்துள்ளனர். அனைவருக்கும் முக்கியத்துவம் இருக்கும். படப்பிடிப்பு ரொம்ப ஜாலியாக இருந்தது.


நிஜ பாம்புடன் நடித்தீர்களா?


நிஜ பாம்புடன் நடிக்கவில்லை. பாம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள், ஸ்பெஷல் எபெக்டில் உருவாக்கப்பட்டுள்ளன. பாம்பை நாங்கள் கடவுளாக வணங்குவோம். நிஜ பாம்பை பார்த்து பயந்து விட்டேன்.


தமிழில் நிறைய இடைவேளை ஏன்?


ஒரே நேரத்தில், ஐந்து படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எதுவுமில்லை. கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற மனநிலையில் உள்ளேன். அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்காவிட்டால், சும்மாவே இருக்கலாம்.


உடல் எடையை எவ்வளவு குறைத்தீர்கள்?


சிலருக்கு உடல் எடை குறைத்தால், பார்க்க சகிக்க முடியாது; அதை நானே பலரிடம் பார்த்துள்ளேன். என் பழைய உருவத்தை இந்த படத்தில் பார்க்கலாம். புதிய தோற்றத்தை பார்க்கலாம். 15 கிலோ வரை எடையை குறைத்துள்ளேன்.


அதிக, செல்பி ஏன்... அதிலும், பிகினி உடையில்?


எந்த இடத்திற்கு போனாலும், செல்பி எடுப்பேன். அதெல்லாம் நினைவுக்காக தான். மற்றபடி, சமூக வலைதளங்களில் படம் போட வேண்டும் என்பதற்காக எடுப்பது இல்லை. மும்பையில் இருக்கிறேன். அங்கு, பிகினி உடைகள் சர்வ சாதாரணம். பிகினி உடை எனக்கு பிடித்துள்ளது. அதனால், அதுபோன்ற உடைகளை அணிந்து படம் எடுக்கிறேன். கவர்ச்சி புகைப்படத்தை விமர்சனம் செய்வோர், அதை பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்ளலாம்.


திருமணம் எப்போது?


நான் தான், என் கணவரை தேர்ந்தெடுப்பேன். அந்த சுதந்திரத்தை, என் வீட்டில் கொடுத்துள்ளனர்.


காதல் அனுபவங்கள்?


அதெல்லாம் கணக்கே இல்லை. பள்ளியில் நிறைய ஆண் நண்பர்கள் இருந்தனர். அதையெல்லாம் கணக்கு போட்டால், வேறு லெவல் ஆகிவிடும்

.
அரசியலுக்கு அழைப்பு வந்ததா?


நிறைய வாய்ப்பு வந்தது. அவற்றை மறுத்து விட்டேன்.


இப்போதுள்ள நிலையில், நல்ல நடிகையாக யாரை நினைக்கிறீர்கள்?


நிறைய பேர் உள்ளனர். நயன்தாரா, டாப்சி போன்றவர்கள் நன்றாக நடிக்கின்றனர்.


மீ டூ விவகாரம் குறித்து?இது நல்ல விஷயம் தான். பலர், தைரியமாக முன் வந்து பேசியது நல்ல விஷயம். ஆனால், சிலர் அதை தவறாக பயன்படுத்துகின்றனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பெண்களின் ஆடை விஷயத்தில் மற்றவர்கள் தலையிட கூடாது: ஓவியாபெண்களின் ஆடை விஷயத்தில் மற்றவர்கள் ... பொள்ளாச்சி சம்பவத்தை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது: சமந்தா பொள்ளாச்சி சம்பவத்தை அதிகம் பேசாமல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

meenakshisundaram - bangalore,இந்தியா
19 மார், 2019 - 03:29 Report Abuse
meenakshisundaram ஆஹா ஆண்டவன் கொடுத்த கண்ணையே மூடிக்கொள்ள வேணுமா? எப்படியேனும் அசிங்கத்தைக் காட்டணுமா?
Rate this:
skv - Bangalore,இந்தியா
17 மார், 2019 - 17:00 Report Abuse
skv<srinivasankrishnaveni> எதுலேயும் இவ்ளோ ஆபாசம் தேவையே இல்லே , கேரக்டரும் ஜீரோ எவ்ளோனால் ஆடுவீங்க மார்க்கெட்போனால் அவ்ளோதான் கன்னாபின்னா கந்தரகோலம் தான்
Rate this:
Young Prince - Bangalore,இந்தியா
15 மார், 2019 - 10:24 Report Abuse
Young Prince யாரு இந்த ராய்?
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15 மார், 2019 - 07:32 Report Abuse
Mani . V "கவர்ச்சி புகைப்படத்தை விமர்சனம் செய்வோர், அதை பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்ளலாம்". - இவளை போன்றவர்கள் தமிழ் சினிமாவுக்கு சாபக்கேடானவர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in