Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உலகளவில் சாதித்து ரூ.7 கோடி பரிசு வென்ற சென்னை சிறுவன்

14 மார், 2019 - 17:24 IST
எழுத்தின் அளவு:
Lydian-Nadhaswaram-won-Rs.7-crore-award

அமெரிக்காவில் நடந்த பிரபல ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்த, 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் பங்கேற்றார். புகழ்பெற்ற பல இசை மேதைகள் நடுவர்களாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், வேகமாக பியானோ வாசித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஏற்கனவே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

பலகட்ட போட்டிக்கு பின்னர் இறுதிப்போட்டிக்கு லிடியனும் தேர்வானார். இறுதிப்போட்டியில், லிடியன் இரண்டு கைகளால் பியானோ வாசித்து அசத்தி, வெற்றி பெற்றார். அவருக்கு, தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டமும், 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ7. கோடி) பரிசு தொகையையும் வழங்கப்பட்டது.

இதுப்பற்றி லிடியன் கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடு மீது உலகப்பார்வை விழ தொடங்கி இருக்கிறது, சாதனைகள் தொடரும் என்றார்.

கவுரவித்த ரஹ்மான்

இதனிடையே லிடியனை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை வரவழைத்து கவுரவித்தார். லிடியன், ரஹ்மானின் கேஎம்., இசைப்பள்ளியில் பயின்றவர். அதோடு இந்தப்பள்ளியின் தூதராகவும் லியடினை நியமித்திருக்கிறார் ரஹ்மான்.

லிடியனின் வெற்றி, இந்தியாவின் வெற்றி என ரஹ்மான் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
14 ஆண்டுகளை நிறைவு செய்த அனுஷ்கா14 ஆண்டுகளை நிறைவு செய்த அனுஷ்கா 'யங் மங் சங்' 'யங் மங் சங்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
15 மார், 2019 - 05:57 Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) அசத்திட்டப்பா..
Rate this:
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
14 மார், 2019 - 20:06 Report Abuse
Murugan வாழ்த்துகள் மகனே……..மென்மேலும் தொடரட்டும் உன் சாதனைகள்……….
Rate this:
Deep - Bangalore,இந்தியா
14 மார், 2019 - 19:55 Report Abuse
Deep Isn't Old news ??
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
14 மார், 2019 - 19:53 Report Abuse
uthappa வாழ்த்துக்கள்.இறைவன் அருள் எப்போதும் இருக்கட்டும்.மேலும் மேலும் புகழ் அடையட்டும்.
Rate this:
Antony Raj - tirunelveli,இந்தியா
14 மார், 2019 - 19:42 Report Abuse
Antony Raj இந்தியாவையும் தமிழகத்தையும் தலை நிமிர செய்ததற்கு எங்களது நன்றியும் வாழ்த்துக்களும்.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in