Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயனுக்குத்தான் 'ஹீரோ' தலைப்பு

14 மார், 2019 - 11:22 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-will-get-Hero-Title

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், கல்யாணி நடிக்கும் படத்திற்கு 'ஹீரோ' என்ற தலைப்பை அறிவித்து, நேற்று படப்பிடிப்பையும் ஆரம்பித்தார்கள். ஆனால், நடு இரவில் அவசர அவசரமாக தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவீ மேக்கர்ஸ், விஜய் தேவரகொண்டா தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடிக்க உள்ள புதிய படத்திற்கும் 'ஹீரோ' என்ற பெயரை அறிவித்தார்கள்.

ஒரே நாளில் இப்படி ஒரே தலைப்பில் இரண்டு படங்களின் அறிவிப்பு ஏட்டிக்குப் போட்டியாக வந்தது ஆச்சரியமாக இருந்தது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர், கில்டு ஆகிய மூன்று சங்கங்களில் தமிழ்ப் படத்திற்கான தலைப்பு பதிவு செய்யப்படுகிறது.

ஒரு சங்கத்தில் இந்தத் தலைப்பு வேண்டும் என விண்ணப்பம் கொடுத்தால், விண்ணப்பத்தை வாங்கிய குறிப்பிட்ட சங்கம், மற்ற இரண்டு சங்கங்களிலும் அப்படி ஒரு தலைப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா இல்லையா, என்பதை விசாரித்து மேற்படி தலைப்புக்கு அனுமதி வழங்கி கடிதம் கொடுப்பார்கள்.

அந்த விதத்தில் சிவகார்த்திகேயன் பட நிறுவனம், இந்த 'ஹீரோ' தலைப்பை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து அனுமதி கடிதம் மூலம் வாங்கியுள்ளனர். அதனால், அவர்களுக்குத்தான் இந்தப் பெயரில் முழு உரிமை உள்ளதாம். மேலும், இந்த தலைப்பை தயாரிப்பாளரும், இயக்குனரும், இசையமைப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் 2017ம் ஆண்டிலேயே பதிவு செய்து வைத்துள்ளார். அவரிடம் சிவகார்த்திகேயன் பட நிறுவனம் அணுகி, அந்தத் தலைப்பை வாங்கியுள்ளார்கள்.

ஒரு தயாரிப்பாளர் எந்தத் தலைப்பு வேண்டும் என்று விண்ணப்பத்துடன் அதற்குரிய கட்டணத்தைக் கட்டி தலைப்பைக் கோரலாம். ஆனால், அதை சம்பந்தப்பட்ட சங்கம் மற்ற சங்கங்களுடன் ஆலோசித்து தலைப்பு அங்கீகரிக்கும் குழு, வேறு எந்த சிக்கலும் இல்லை என்று தெரிந்த பின்னர்தான் அனுமதி கடிதம் வழங்குவார்களாம். இதுதான் நடைமுறை.

ஆனால், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ஹீரோ' படத்திற்கான தலைப்புக்காக அவர்கள் விண்ணப்பம் மட்டும்தான் கொடுத்துள்ளார்களாம். ஆனால், அவர்களுக்கு அந்தத் தலைப்பை தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கடிதம் மூலம் வழங்கவேயில்லை. விண்ணப்பம் செய்துவிட்டதால் மட்டும் ஒரு தலைப்பை உரிமை கோர முடியாது. அனுமதி கடிதம் கொடுத்த பிறகு மட்டும்தான் உரிமை கோர முடியும் எனச் சொல்கிறார்கள்.

தமிழ் திரைப்படத் துறையில் மட்டும்தான் தமிழ்ப் படங்களுக்கு இப்படி மூன்று சங்கங்கள் தலைப்பு வழங்கும் பொறுப்பைப் பகிர்ந்து தருகின்றன. அதை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும், அல்லது தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திடம் மாற்றித் தர வேண்டும் என்ற கோரிக்கை இங்கு நீண்ட காலமாக உள்ளது. அதை நிறைவேற்றாத வரையில் இப்படிப்பட்ட குழப்பங்கள் தொடரும் என்று இயக்குனர்கள் வருந்துகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் ரீமேக் ஆகிறது தடம்தெலுங்கில் ரீமேக் ஆகிறது தடம் ஆர்ஆர்ஆர் தலைப்பு : நாயகி ஆலியா, அஜய் தேவகனும் இணைந்தார் ஆர்ஆர்ஆர் தலைப்பு : நாயகி ஆலியா, அஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

prem - hidd  ( Posted via: Dinamalar Windows App )
14 மார், 2019 - 12:29 Report Abuse
prem good give him....otherwise he come and cry in the audio function.
Rate this:
prem - hidd  ( Posted via: Dinamalar Windows App )
14 மார், 2019 - 12:29 Report Abuse
prem good give him....otherwise he come and cry in the audio function.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in