Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரவுடி பேபி - 71 நாளில் 300 மில்லியன் சாதனை

14 மார், 2019 - 10:17 IST
எழுத்தின் அளவு:
Rowdy-Baby-made-300-million-hits-in-71-days

'மாரி 2' படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் யு டியூபில் 71 நாட்களில் 300 மில்லியன்(30 கோடி) பார்வைகளைப் பெற்று புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் அந்தப் பாடலுக்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்து அந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

படம் 2018 டிசம்பரில் வெளிவந்தாலும், ஜனவரி 2ம் தேதிதான் 'ரவுடி பேபி' பாடலின் வீடியோவை யு டியூபில் வெளியிட்டார்கள். உடனடியாக அந்தப் பாடல் வைரலாகி தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்தி வந்தது.

16 நாட்களில் 100 மில்லியன், 42 நாட்களில் 200 மில்லியன் சாதனையைப் படைத்த இந்தப் பாடல் 71 நாட்களில் 300 மில்லியன் சாதனையைப் படைத்திருக்கிறது. தென்னிந்திய சினிமா பாடல் ஒன்று 300 மில்லியன் சாதனையைப் படைப்பது இதுவே முதல் முறை.

யு டியுபைப் பொறுத்தவரையில் இந்திய அளவில் ஒரு பாடலுக்கு 100 மில்லியன் பெற்ற சாதனையை 'கொல வெறி' பாடல் மூலம் முதலில் நிகழ்த்தியது தனுஷ்தான். இப்போது தென்னிந்திய அளவில் 'ரௌடி பேபி' பாடல் மூலம் 300 மில்லியன் சாதனையை முதன் முதலில் நிகழ்த்தியிருப்பதும் தனுஷ்தான். இந்திய அளவில் 2வது பாடலாக அமைந்துள்ளது.

அதனால், யு டியுபில் தனுஷ்தான் முன்னோடி என தனுஷ் ரசிகர்கள் இந்த சாதனையைக் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'சாஹோ' அடுத்த போஸ்டர் குறித்த சர்ச்சை'சாஹோ' அடுத்த போஸ்டர் குறித்த ... இரும்புத்திரையின் சாயல் இல்லாத ஹீரோ: தயாரிப்பாளர் இரும்புத்திரையின் சாயல் இல்லாத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
14 மார், 2019 - 19:06 Report Abuse
Vasudevan Srinivasan இதெல்லாம் ஒரு சாதனையா...
Rate this:
Halfmoon - Karaikudi,இந்தியா
14 மார், 2019 - 12:58 Report Abuse
Halfmoon ஒவ்வொரு ஆயிரம் பார்வைக்கும் ஒரு டாலர் தருகிறது யு டியூப். புகழ் கூட.. கூடவே இரண்டு கோடி பணமும் கிடைச்சிருக்கு தனுசுக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in