2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! | வெப் தொடர் இயக்கும் ஸ்ரீ கணேஷ்! | சித்தா படத்தின் டிரைலரை வெளியிடும் சூர்யா! | ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அனிமல் படக்குழுவினர்! | சிரஞ்சீவி படத்தில் மூன்று கதாநாயகிகள்! |
சாருஹாசன் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான படம் தாதா 87. சின்னத்திரை தொகுப்பாளர் ஆனந்த் குமார், ஸ்ரீ பல்லவி, ஜனகராஜ், கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா உள்பட பலர் நடித்திருந்தனர். விஜய்ஸ்ரீ ஜி இயக்கி இருந்தார்.
இந்தப் படத்தில் சாருஹாசன், ஒரு தாதாவா வாழ்ந்து கொண்டே தன் பழைய காதலி சரோஜாவை தேடுவது ஒரு கதையாக இருந்தது. ஆனந்த் குமார், ஸ்ரீ பல்லவியை துரத்தி துரத்தி காதலிப்பார். கடைசியில் தான் தெரியும் அவர் ஒரு திருநங்கை என்று, அதன்பிறகு விலகி ஓடுவார். இறுதியில் அன்பு ஜெயிக்கும். இது ஒரு தனிக் கதை. இந்த இரு கதைகளில் சாருஹாசன் கதையை மக்கள் ஏற்கவில்லை. ஆனால் ஆனந்த் குமார், ஸ்ரீபல்லவி கதை பரவலான பாராட்டை பெற்றது. என்றாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதனால் சாருஹாசன் கதையை குறைத்து, ஆனந்த்குமார், ஸ்ரீ பல்லவி காதலை அதிகப்படுத்தி மேலும் சில மாற்றங்களுடன் படத்தை மீண்டும் திரையிட இருக்கிறார்கள். இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மிஷ்கின் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான படம் சித்திரம் பேசுதடி. இப்படம் முதலில் வெளியான போது நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், மீண்டும் ஆஸ்கர் ரவிசந்திரன் இப்படத்தை வாங்கி ஆஸ்கர் பிலிம்ஸ் பேனரில் தமிழகமெங்கும் மறுவெளியீட்டில் படம் பெறும் வெற்றி அடைந்தது.
தாதா 87 திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இத்திரைப்படம் தமிழகத்தில் முக்கியமான ஏரியாக்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட முடியவில்லை.
இந்திய சினிமா வரலாற்றில் ஆண், பெண் வேடத்திலும், பெண், ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண், திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் இப்படத்தை பார்த்த மக்கள் கூறிய நிறை குறைகளை ஆராய்ந்து பல மாறுதல்களை செய்து, புது பொலிவுடன் கோடை விடுமுறை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.