Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொள்ளாச்சி சம்பவம் - மிருகங்களுக்கு மரண தண்டனை : திரையுலகினர் கருத்து

12 மார், 2019 - 15:59 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-celebrites-condemned-on-Pollachi-incident

பொள்ளாச்சியில் பல இளம் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் ஒரு இளம் பெண், "அண்ணா என்ன விட்டுங்க, பெல்ட்டால் அடிக்காதீங்க ஆடையை கழற்றுகிறேன்" என கதறும் வீடியோ வெளியாகி, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் அரசியல் பெரும் புள்ளிகளின் வாரிசுகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. வழக்கு விசாரணையும், சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு திரையுலகினர் பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

கமல்ஹாசன்
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டி சென்னை, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மன்னிக்க முடியாத தவறு என்றார்.

பார்த்திபன்
டுவிட்டரில் பார்த்திபன் கூறியிருப்பதாவது : பொள்ளாச்சி சம்பவம் கதி கலங்கச் செய்தது. இவ்வன்முறை வருடம் ஒரு முறை வந்தது போய், மாதம்இருமுறையும், வாரம் ஒரு முறையுமாய் வருவது, நீதிமன்றத்தின் கடுமையாக்கப்பட்ட தண்டனைகளால் மட்டுமே மட்டு படுத்தப்படும் என பதிவிட்டுள்ளார்.

சித்தார்த்

பொள்ளாச்சி சம்பவத்தால் அதிர்ச்சியானேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். அப்போதுதான் அவர்களால் முன்வந்து பேசி, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கை வலுப்படுத்த முடியும் என சித்தார்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷ்
டுவிட்டரில் ஜிவி பிரகாஷ் கூறியிருப்பதாவது : மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது... இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து என பதிவிட்டிருக்கிறார்.

வாசுகி பாஸ்கர்
ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : “உன்னை நம்பித்தானே வந்தேன்?” என்றும், “அடிக்காதிங்க, லெக்கிங்க்ஸை கழட்டுர்றேன்” என்று அந்தப்பெண் அழும் போது ஈரக்குலையெல்லாம் நடுங்குறது. கண்ணை மூடி சரமாரியாக வாள் வீசி கழுத்தறுத்து போடுமளவான கோவம் அந்தப்பொறுக்கிகள் மேல் உற்பத்தியாகிறது என பதிவிட்டிருக்கிறார்.

வரலட்சுமி
நடிகை வரலட்சுமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது : மீண்டும் மீண்டும் அதே குற்றச்சம்பவங்கள். பெண்கள் தினம் கொண்டாடுகிறோம், ஆனால் சமூகத்தில் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகள் கண்டிப்பாக கொல்லப்பட வேண்டும். இப்படிப்பட்ட உலகத்தில் தான் நாம் வாழ்கிறோம். பாலியல் பலாத்காரத்திற்கு தீர்வு மரண தண்டனை மட்டுமே என பதிவிட்டுள்ளார்.

கவிஞர் பா.விஜய்

கவிஞர் பா.விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது : பொள்ளாச்சி சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். ஆயிரம் ஆயிரம் பெண் தெய்வங்களை வணங்கும் இந்த மண்ணில் இப்படிப்பட்ட பழிபாதக செயல் நடந்திருப்பது பதை பதைக்க செய்கிறது. அந்த மிருகங்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி தண்டனை கொடுக்காமல், அரபு நாடுகளில் செய்வது போன்று அவன்களை இழுத்து வந்து பொள்ளாச்சி மண்ணில் பொது மக்கள் முன்னிலையில் கழுவில் ஏற்றி மரண தண்டனை விதித்தால் மட்டும் தான், இப்படிப்பட்ட குற்றச் செயல்கள் இனி நடக்காது. இந்த முறையற்ற மனிதர்களை வேர் அறுக்க வேண்டும் என அனைவரது சார்பிலும் கேட்டு கொள்கிறேன் என கூறி உள்ளார்.


சசிகுமார்
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெண்களை கொடூரமாக நாசம் செய்திருப்பது குலைநடுங்க வைக்கிறது. உடனடியாக இந்தக் கொடூரர்களை தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என சசிகுமார் டுவிட்டரில் கூறியிருக்கிறார்.

இமான்

நம்முடைய இந்த வாழ்க்கை சூழலை நினைத்து வெட்கபட வேண்டும். எப்படியாவது பெண்களை அடைய முடியும் என்று நினைக்கும் ஆணாதிக்கவாதிகள் கூட தாயின் கருவறையில் இருந்து தான் வந்திருக்கிறார்கள் என்று உணர வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்திற்கு நீதி வேண்டும் என இசையமைப்பாளர் இமான் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.இவ்வாறு பல திரையுலக பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (55) கருத்தைப் பதிவு செய்ய
பொன்னியின் செல்வனில் கார்த்திபொன்னியின் செல்வனில் கார்த்தி தியேட்டர் அதிபருக்கு கிரீன் டீ போட்டுக்கொடுத்த விஜய் தியேட்டர் அதிபருக்கு கிரீன் டீ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (55)

Roopa Malikasd - Trichy,இந்தியா
15 மார், 2019 - 20:00 Report Abuse
Roopa Malikasd சமுதாய சீரழிவிற்கு சினிமா காரர்களாகிய நீங்கள் தான் முக்கிய பங்காற்றி இருக்கிறீர்கள் என்பது தான் நிதர்சன உண்மை..இப்போ போயி அந்த பசங்கள குறை சொல்லுகிறீர்கள் எங்கேயாவது அடுக்குமா
Rate this:
sam - Bangalore,இந்தியா
15 மார், 2019 - 11:43 Report Abuse
sam Cine Industries, you do not have any rights to talk about this incident. Are you guys (Boy & Girl) really perfect? Because of you ppl, this kind of incidents are happening.
Rate this:
Sangeedamo - Karaikal,இந்தியா
15 மார், 2019 - 11:17 Report Abuse
Sangeedamo "மிருகங்களுக்கு தண்டனை" தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள்... ஏனெனில் மிருகங்கள் தன் சக மிருகங்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்காது, சக மிருகங்கள் துயருறும் போது அதனை இரசிக்காது, தன் இணையை துன்புறுத்தி இன்பம் கொள்ள என்னாது.... ஆதலால் இந்த பதறுகளை எந்த புனித படைப்புகளோடும் ஒப்பிட்டு கேவல படுத்த வேண்டாம்....
Rate this:
Shroog - Mumbai ,இந்தியா
15 மார், 2019 - 09:17 Report Abuse
Shroog சினிமாக்காரங்களுக்கு அடுத்த படத்திற்கு கதை திரைக்கதை ஓசியில் கிடைத்துவிட்டது. படத்தின் பெயர் பொள்ளாச்சி பயங்கரம்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
15 மார், 2019 - 02:56 Report Abuse
meenakshisundaram இதிலே திரை உலகம் முன்னோடியல்லவா?,இதெல்லாம் திரை உலகத்தினருக்கு சாதாரணமப்பா. இவர்களில் நல்லவர்களும் உண்டு என்றாலும் மக்கள் கேட்ட ஹீரோக்களையே தங்கள் மாடல் ஆக்கப்பார்க்கிறார்கள்.
Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in