Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலியல் தொல்லை : சிக்குகிறார் நடிகர்

11 மார், 2019 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Actress-Vijayalakshmi-accuses-Kannada-Actor

தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த 'பிரெண்ட்ஸ்' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இதையடுத்து, ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'மிசைய முறுக்கு' போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் சரிவர இல்லாததால், சின்னதிரையில் நடித்து வந்தார். இதனிடையே, கடந்த 2006ல், தனது தந்தையை இழந்த விஜயலட்சுமி, தற்கொலைக்கு முயன்றதாகச் செய்திகள் வெளியாகின. அதன்பின், நடிகர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். 2007ல் நடக்க வேண்டிய அந்த திருமணம் திடீரென்று ரத்தானது.

சமீபத்தில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, உயர் ரத்த அழுத்த பிரச்னை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், பெங்களூருவில் உள்ள மல்லையா மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகை விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நடிகை விஜயலட்சுமியின் சகோதரி உஷா தேவி, மிகுந்த பொருளாதார சிக்கலில் உள்ளோம். விஜயலட்சுமியின் சிகிச்சைக்குக் கன்னட திரைத்துறையினர் உதவ வேண்டும் என்றார்.
இதையடுத்து கன்னடத் திரைத்துறையினர் அவருக்கு உதவி வருகின்றனர்.

இந்நிலையில், கன்னட நடிகர் ரவி பிரகாஷ், கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனைக்குச் சென்று, விஜயலட்சுமியிடம் நலம் விசாரித்துவிட்டு, ஒரு லட்ச ரூபாய் உதவி செய்தார். தற்போது, ரவி பிரகாஷ் மீது புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில், விஜயலட்சுமி புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த மாதம் 27ம் தேதி நடிகர் ரவி பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை சந்திக்க வந்தார். அப்போது எனக்கு, ஒரு லட்ச ரூபாய் கொடுத்தார். அதன்பின், எனது செல்போனுக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பியும், ஆபாசமாகப் பேசியும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, நடிகர் ரவி பிரகாஷை அழைத்து விசாரிக்க முடிவெடுத்துள்ளனர் போலீசார். ஒரு லட்ச ரூபாய் உதவிய போது, அதைப் பெற்றுக் கொண்ட விஜயலட்சுமி ஏன் திடுமென இப்படி புகார் அளிக்கிறார் என புரியாமல் இருக்கின்றனர் நடிகர் ரவி பிரகாஷின் ஆதரவாளர்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
விஷால் பட பாடலுக்கு மீண்டும் நடிகை மாற்றம்விஷால் பட பாடலுக்கு மீண்டும் நடிகை ... அலை சறுக்கு பயிலும் அமலாபால் அலை சறுக்கு பயிலும் அமலாபால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

arabuthamilan - Manama,பஹ்ரைன்
14 மார், 2019 - 17:56 Report Abuse
arabuthamilan ஒருவேளை நடிகையை கவர்ந்து கொள்வதற்காக ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்திருப்பார்.
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13 மார், 2019 - 11:06 Report Abuse
Nallavan Nallavan பணத்தை முதலீடு பண்ணுறவன் அதுனால ஏதாவது பெனிபிட் இருக்கா-ன்னு தேட மாட்டானா ??
Rate this:
Krishnan - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
12 மார், 2019 - 18:53 Report Abuse
Krishnan இப்படி உதவி பண்ண வருகிறவங்களே சொன்னா அடுத்து யாரு உதவி பண்ண வருவாங்க
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
12 மார், 2019 - 15:40 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இப்படியான உள்நோங்கங்களுடம் உதவி செய்வது மனிதாபிமானமற்ற செயல். ஆண், பெண்ணை விரும்புவதில் தவறில்லை. ஆனால், மனிதாபிமான முறையில் நடைமுறைகள் இருக்க வேண்டும். பணத்தைக் கொடுப்பதற்கு முன் இப்படி நடந்திருந்தால், அந்தப் பெண் பணத்தை வாங்க மறுத்திருப்பார். காதலுக்கும் காமத்திற்கும் அர்த்தம் தெரியாத நிலைதான் இது.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
11 மார், 2019 - 17:29 Report Abuse
Vasudevan Srinivasan இந்த செய்தியின் இறுதியில் 'ஒரு லட்ச ருபாய் கொடுத்தபோது பெற்றுக் கொண்ட விஜயலக்ஷ்மி' இப்போது ஏன் இப்படி பேசுகிறார் என்று கேட்பதில் ஆபாசம் தொனிக்கிறது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in