Advertisement

சிறப்புச்செய்திகள்

நெருக்கமாக நடிக்க 50 லட்சம் - அனுபமா முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி | நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கு; ஹரிநாடார் கைது | மீண்டும் ரசிகர்களை களத்தில் இறக்கி விடும் விஜய் | நிக்கி கல்ராணியின் வீட்டில் திருட்டு- காவல் நிலையத்தில் புகார் | தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு குறித்து கடந்த மாதமே பதிவிட்ட செல்வராகவன் | கேஜிஎப் -2 படத்துடன் மோதும் விஜய்யின் பீஸ்ட் | சிறுமிகள் பாடிய வீடியோவைப் பகிர்ந்த ஏஆர் ரகுமான் | தனுஷ், ஐஸ்வர்யா சமரசம் செய்து வைக்க முயற்சி? | ஆடிஷன்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர்; மனம் திறக்கும் அபி நவ்யா | தன் செல்ல நாயுடன் விமானத்தில் பயணித்த விஜய் தேவரகொன்டா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐயப்பன் பற்றிய படத்தில் அனுஷ்கா?

11 மார், 2019 - 10:23 IST
எழுத்தின் அளவு:
Anushka-in-Iyappan-movie

'பாகமதி' படத்திற்குப் பிறகு ஒரு இடைவெளி விட்ட அனுஷ்கா, தன் உடல் எடை குறைப்புக்குப் பிறகு இப்போது புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாராக உள்ள 'சைலன்ஸ்' படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.

அந்தப் படத்திற்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன், ஐயப்பன் பற்றி எடுக்க உள்ள படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. “செக்கச் சிவந்த வானம், ஸ்பைடர், அஞ்சான், துப்பாக்கி, ராவணன்,” உள்ளிட்ட பல தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன். அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்திற்கும் அவர்தான் ஒளிப்பதிவாளர்.

சந்தோஷ் சிவன், “இனம், உருமி, நவரசா, மல்லி, தி டெரரிஸ்ட்” உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ளார். தற்போது மலையாளத்தில் 'ஜாக் அன்ட் ஜில்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கடுத்து அவர் ஐயப்பன் பற்றிய ஆன்மீகப் படத்தை இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருப்பதாகவும், மலையாளம், தமிழ், தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார் என்றும், படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

அனுஷ்கா நடிப்பது உறுதியாகி இருப்பது என கூறப்படுகிறது. ஆனால், அனுஷ்கா இதுவரை எதுவும் சொல்லவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜீத்தை அறிமுகப்படுத்திய எஸ்.பி.பாலசுப்ரமணியம்அஜீத்தை அறிமுகப்படுத்திய ... நீதிமன்ற வசனங்கள் : அசத்தும் அஜித் நீதிமன்ற வசனங்கள் : அசத்தும் அஜித்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in