Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத்தை அறிமுகப்படுத்திய எஸ்.பி.பாலசுப்ரமணியம்

10 மார், 2019 - 14:33 IST
எழுத்தின் அளவு:
SPB-reveals-his-role-in-Ajith-getting-his-first-film

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இப்போதைய இளவட்ட நடிகர்களுக்கும் அவர் அவ்வப்போது பாடி வருகிறார். மேலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது மகன் எஸ்.பி.பி.சரணுடன் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அஜீத்குமாரை நான் தான் சினிமாவில் அறிமுகம் செய்தேன் என்றொரு புதிய தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ஆந்திராவில் என் மகன் எஸ்.பி.பி.சரணும், அஜீத்தும் ஒன்றாகத்தான் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்தார்கள். ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த அஜீத், செண்டி மென்டாக எனது மகனின் டிரஸ்களைத்தான் அணிந்து செல்வார்.


அதன்பிறகு பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க நான்தான் அஜீத்தை அறிமுகம் செய்தேன். இப்போது பெரிய ஹீரோவாகி விட்டார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் எந்த அலட்டலும் செய்யாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று எந்த வம்புக்கும் போகாமல், சினிமா, குடும்பம் என்று அமைதியாக வாழ்ந்து கொண்டு வருகிறார். அதுதான் அவரிடம் எனக்கு ரொம்ப பிடித்த விசயம் என்கிறார் எஸ்.பி.பி.,


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
நிவேதா பெத்துராஜின் ஹாலிவுட் கனவு நனவாகப்போகிறதுநிவேதா பெத்துராஜின் ஹாலிவுட் கனவு ... ஐயப்பன் பற்றிய படத்தில் அனுஷ்கா? ஐயப்பன் பற்றிய படத்தில் அனுஷ்கா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11 மார், 2019 - 08:12 Report Abuse
Natarajan Ramanathan செந்தில்(sbb charan)சட்டையப்போட்ட ரஜினி(அஜீத்) பெரிய ஹீரோவாகி விட்டார். So, சட்டை முக்கியமில்லை......திறமைதான் முக்கியம் என்று தெரிகிறது.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
11 மார், 2019 - 07:22 Report Abuse
Bhaskaran மந்தை வெளியில் என்னுறவினர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஆரம்பநாட்களில் அஜித் வாழ்ந்துவந்தார் இருக்கும் இடம் தெரியாத நல்லபையன் என்று அவர் இப்போதும் கூறுவார்
Rate this:
Manian - Chennai,இந்தியா
11 மார், 2019 - 05:26 Report Abuse
Manian எஸ்.பி க்க இன்னும் தன்னம்பிகள் இல்லை போலிருக்கிறதே தாழ்வு மனப்பான்மையும் கூடவே இருக்கிறதே. இதை அஜித் சொல்லி இருந்ததன் அவருக்கு மதிப்பு கூடும். சுய விளம்பரம் தேவையா?
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
10 மார், 2019 - 18:19 Report Abuse
VELAN S இனிமே நான் எப்படி அஜித் அல்லது எஸ் பி பி சரண் கூட ஸ்கூலில் படிப்பது , எப்போ நான் சினிமா நடிகனாவது , இதெல்லாம் நடக்குமா , சாதாரண சுப்பையா குப்பையா கூட ஸ்கூல் படிச் ஆ பிரயோஜனம் இல்லை போலிருக்கு , என்க கொண்டு சொல்ல .
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
11 மார், 2019 - 00:22Report Abuse
BoochiMarunthuஅதெல்லாம் பணம் கொடுத்து பாஸ் ஆகிற ஸ்கூல் . அதில் படிச்சா அறிவு வளராது ....
Rate this:
skv - Bangalore,இந்தியா
11 மார், 2019 - 09:42Report Abuse
skv<srinivasankrishnaveni>விரலுக்கேற்றவீக்கம்னுவா அதுபோல எந்தப்பள்ளியே படிச்சாலும் நாம் பிரபலம் ஆஓணும்னு இருந்தால் ஆயிடுவோமே குண்டூர் சுப்பையா பள்ளிலேபடிச்சா சரிதா அவ்ளோ பெஸ்ட் நடிகை ஆனா அதேபோல சர்ச்சுப்பார்களே படிச்ச ஜெயலலிதாவும் ஆஹாஆஹோ ன்னுயிருந்தாங்க இதற்கெல்லாம் காரணம் ழாக் மட்டுமேதான் நம்மளோட படிச்ச பலரும் குடும்பத்தலைவியாக இருக்க சிலர்தான் பிரபலம் ஆ வங்க...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in