ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? | ரஜினி செய்த மாற்றம் |
ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப்படத்தை அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகும் மே 1-ம் தேதி அன்று திரைக்குகொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தற்போது இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்ஷ்ன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். இந்த படம் தவிர, இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்துக்கு ஹீரோ என பெயர் சூட்டப்பட உள்ளது.
ஹீரோ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கப்படவிருக்கிறது. அந்தப்படத்தை அடுத்து கேலமாவு கோகிலா பட இயக்குநரான நெல்சன் இயக்கத்தில் தன்னுடைய எஸ்.கே.புரடக்ஷன்ஸ் பேனரில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்தப்படத்தையும் ஜூன் மாத வாக்கிலேயே தொடங்க திட்டமிட்டுள்ளனர். தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே.புரடக்ஷன்ஸ் பேனரில் நடிக்க ஆரம்பித்திருப்பதன் மூலம், அவரது நண்பரான ஆர்.டி.ராஜா பெயரில் ஆரம்பித்த 24 ஏஎம் ஸ்டுடியோஸ் பட நிறுவனத்தை கைகழுவிவிட்டார் சிவகார்த்திகேயன்.