Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யா, சாயிஷா திருமணம் கோலாகலம்

10 மார், 2019 - 13:27 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் உள்ளம் கேட்குமே படம் மூலம் நடிகராக தன் பயணத்தைத் தொடங்கியவர் ஆர்யா. ஆனால், அந்தப் படம் வருவதற்கு முன்பே வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படம் ஆர்யாவுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.


நான் கடவுள் படம் ஆர்யாவுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் வெளிவந்த மதராசப் பட்டிணம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி ஆகிய படங்கள் மட்டுமே அவருக்கு பேர் சொல்லும் படங்களாக அமைந்தன.


ஆர்யாவைப் பற்றி அடிக்கடி ஏதாவது காதல் கிசுகிசுக்கள் வந்து கொண்டேயிருப்பது வழக்கம். அவரைப் பற்றியும் அவருடன் ஜோடியாக நடித்த நடிகைகள் பற்றியும்தான் அந்த கிசுகிசுக்கள் அமையும்.


அப்படித்தான் அவரைப் பற்றியும், அவருடன் கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சாயிஷா பற்றியும் வந்தது. ஆனால், இந்த முறை அது கிசுகிசுவாக இல்லாமல் கல்யாணத்தில் முடிந்துவிட்டது.


இருவருடைய காதல் திருமணம் இன்று(மார்ச் 10) மாலை 6.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் முஸ்லிம் முறைப்படி நடைபெற்றது. இருவருமே முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இரவு 8 மணிக்கு திருமண வரவேற்பு நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.


திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற சங்கீத் நிகழ்வில் திரையுலகப் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


ஆர்யா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இங்குதான் அதிகப் படங்களில் நடித்து வருகிறார். சாயிஷா தெலுங்கில் அறிமுகமாகி தமிழில் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். சாயிஷா மும்பையைச் சேர்ந்தவர். ஆனால், இருவரது திருமணம் அவர்கள் வசிக்கும் ஊரில் நடக்காமல் பொதுவான இடமாக ஹைதராபாத்தில் நடந்தது ஆச்சரியமாக உள்ளது.


இதனிடையே, ஆர்யா நடிக்கும் புதிய படமான டெடி படத்தின் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. சாயிஷாவும் திருமணத்திற்குப் பிறகு நடிப்பைத் தொடர்கிறார்.



Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சந்தீப் கிஷனுக்காக பின்னணி பாடிய சித்தார்த்சந்தீப் கிஷனுக்காக பின்னணி பாடிய ... சொந்த தயாரிப்பிலும் நடிக்க தயாராகும் சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பிலும் நடிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

s.sakkaravarthi - sivakasi,இந்தியா
12 மார், 2019 - 20:54 Report Abuse
s.sakkaravarthi ஏன் தமிழ் நாட்டில் மண்டபம் கிடைக்கலையா
Rate this:
vns - Delhi,இந்தியா
12 மார், 2019 - 00:54 Report Abuse
vns வேற்று மதத்தவரையும் வேற்று நாட்டவரையும் தமிழகம் ஆதரிக்கக்கூடாது
Rate this:
skv - Bangalore,இந்தியா
11 மார், 2019 - 10:13 Report Abuse
skv<srinivasankrishnaveni> தன்மதமே தான் ஜெயிச்சுது பார்த்தீங்களா கரெக்டுங்க என்னாத்துக்கு வேற்றுமதம்பொன்னுக்கு சங்கடம் தரணும் சாதிகளும் அப்படியேதான் பொண்ணுதாணமாறவேண்டும் ஆண்கள் மாறுவதேஇல்லீங்க ரொம்பவே ரேர் கேசுகளிலேதான் இதுதான் நடக்குது சிலபொண்ணுகள் மனம் மாறி கணவரின் மாதத்துக்கு போயிடுதுங்க ஆனால் வேற்றுமத ஆனைக்காட்டினால் கட்டாயம் பொண்ணுகளேதான் மாறவேண்டியிருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in