ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? | ரஜினி செய்த மாற்றம் |
நடிகர் விஜய், விக்ரம், விஜயசேதுபதி ஆகியோர் தங்கள் படங்களில் மட்டுமே பாடுவார்கள். ஆனால் சிம்பு, தனுஷ் மற்ற நடிகர்களுக்காவும் பாடுவார்கள். இந்த நிலையில் சில படங்களில் தனக்கான பாடியுள்ள சித்தார்த்தும் தற்போது சந்தீப் கிஷன் நடிப்பில் கண்ணாடி என்ற பெயரில் உருவாகி வரும் படத்திற் காக தமன் இசையில் எக்ஸ்கியூஸ் மி ராட்சசி என்ற பாடலை பாடியிருக்கிறார். இப்படம் தெலுங்கில் நினு வீடனி நீடனு என்ற பெயரில் உருவாகிறது.
இப்படத்தை அட்டகத்தி தினேஷின் திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக்ராஜூ இயக்கி வருகிறார். இதில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அனுயா சிங் நடித்துள்ளார்.