நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
சாருஹாசன், கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி நடித்த படம் தாதா 87. கடந்த வாரம் இந்தப் படம் வெளியானது. படத்திற்கு இரண்டுவிதமான விமர்சனங்கள் வந்தாலும் படத்தில் இடம்பெற்ற திருநங்கையின் காதலும் அதில் திருநங்கையாக நடித்த ஸ்ரீபல்லவியும் பாராட்டுகளை பெற்றார்கள். விஜய் ஸ்ரீ ஜி இயக்கி இருந்தார். இப்போது இந்தப் படம் திருநங்கையின் காதலை முன்னிலைப்படுத்தி பவுடர் என்ற டைட்டிலுடன் தெலுங்கில் வெளியாகிறது. அதோடு படத்தின் நீளத்தை குறைத்து மீண்டும் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் தாதா 87 திரைப்படத்தில் ஒரு கதாநாயகி திருநங்கையாக நடித்தது, உலக சினிமா வரலாற்றில் முதல் முயற்சி என்ற சிறப்பைப் பெற்றது. நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் இத்திரைப்படம் தமிழகத்தில் முக்கியமான ஏரியாக்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட முடியாததால், தாதா 87 திரைப்படத்தை கோடைவிடுமுறையில் மீண்டும் திரையிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொள்ள இருக்கிறோம். மேலும் இத்திரைப்படத்தை தெலுங்கில் "பவுடர்" என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ளது என்ற செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.