பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
தமிழ், கன்னட மொழிகளில் 100க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் சுமலதா, கன்னட நடிகர் அம்ரிஷ் பூரியை திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் செட்டிலானார். அம்ரிஷ், காங்கிரஸ் கட்சியில் இணைந்து மத்திய, மாநில அமைச்சராக பணியாற்றினார். தற்போது அவர் மறைந்து விட்டதால் அவரது இடத்துக்கு அவரது மனைவி சுமலதாவை கொண்டுவர அம்ரிஷ் ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி, அம்ரிஷ் போட்டியிட்டு வென்ற மாண்டியா தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விட்டது. இதனால் வாய்ப்பு இழந்த சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்தார். அவரை பாரதிய ஜனதா கட்சிக்கு இழுக்க எடியூரப்பா முயற்சி செய்தார். அதற்கு சுமலாதா, "கணவர் எதிர்த்து வந்த கட்சியில் சேர விருப்பம் இல்லை" என்று சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் மாண்டிய தொகுதியில், தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் சுமலதா. நேற்று ஸ்ரீரங்கபட்டினம் சட்டசபை தொகுதிக்கு சென்ற அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., ரமேஷ் பண்டிசித் தேவகவுடாவை சந்தித்து ஆதரவு கேட்டார்.
பின்னர் அவர் பேசும்போது, "எனக்கு எந்தக் கட்சியும் கிடையாது. எனது கட்சி அம்ரிஷ்தான். வருகிற தேர்தலில் மாண்டிய மக்கள் எனக்கு ஆசீர்வாதம் (வெற்றி) வழங்க வேண்டும்" என்றார்.