Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிசியான ஹீரோக்களின் பட்டியலில் அருண்விஜய்

08 மார், 2019 - 11:33 IST
எழுத்தின் அளவு:
arun-vijay-joined-in-busy-heroes-list

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து கடந்த வாரம் வெளியான 'தடம்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அருண் விஜய் அடுத்து நடிக்க இருக்கும் மற்றொரு படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அறிவழகன் இயக்கத்தில் 'குற்றம்-23' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த அருண் விஜய் மீண்டும் இந்த புதிய படத்திலும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இயக்குநர் ஆர். கண்ணன் மற்றும் மிலன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கோபிநாத் நாராயணமூர்த்தி இந்த படத்தை இயக்குகிறார். நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான கொலைகளை சாமர்த்தியமாக புலனாய்வு செய்து கண்டு பிடிக்கும் போலீஸ் அதிகாரியின் வேடமாம் அருண் விஜய்க்கு!


பெயரிடப்படாத இந்த படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் துவங்க உள்ளது. இந்த படம் தவிர குத்துச்சண்டை வீரராக அருண் விஜய் நடிக்கும் 'பாக்ஸர்' படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்க இருக்கிறது.


தடம் படத்தின் வெற்றி அருண்விஜய்யை பிசியான ஹீரோக்களின் பட்டியலில் சேர்த்துவிட்டது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஆபாசத்துக்கு கிடைத்த மரணஅடிஆபாசத்துக்கு கிடைத்த மரணஅடி விஷாலுக்கு எதிராக பொங்கிய பொட்டு படத்தின் தயாரிப்பாளர் விஷாலுக்கு எதிராக பொங்கிய பொட்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

tshajahan - Vellore,இந்தியா
09 மார், 2019 - 03:19 Report Abuse
tshajahan 15 years before I saw an actor Arun Vijay Le Royal Meridian hotel. Actually he is waiting cross the traffic lane. His discussion with the traffic police is in such a polite way, impressed a lot. Almost 20 years before itself he should have to get a huge success in his first film c but failed to get. I hope he will get the success through his patience and hard work
Rate this:
09 மார், 2019 - 14:55Report Abuse
பூண்டு குசுநீ royal meridian பக்கம் கூட போயிருக்க மாட்ட. உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல....
Rate this:
08 மார், 2019 - 19:26 Report Abuse
பூண்டு குசு கடின உழைப்புக்கு கிடைத்த கூலி. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in