Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பூமராங் படத்திற்கு ரஜினி பாராட்டு

07 மார், 2019 - 16:19 IST
எழுத்தின் அளவு:
Rajini-congrats-Kannan-and-Boomerang-film

கண்ணன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்ஜே.பாலாஜி, சதீஷ், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பூமராங். ரதன் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். பூமராங் படம் நாளை(மார்ச் 8) உலகமெங்கும் வெளியாகிறது. விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த் தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் இப்படம் பேசுகிறது.

இப்படம் பற்றிய விஷயங்களை அறிந்து, நதிநீர் இணைப்பை பல்லாண்டுகளாக வலுயுறுத்தி வரும் ரஜினி, கண்ணனை தன் இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்த சந்திப்பில் நெகிழ்ந்து போயிருக்கிறார் கண்ணன்.

ரஜினி உடனான சந்திப்பு குறித்து கண்ணன் கூறுகையில், "ரஜினியிடமிருந்து அழைப்பு வந்ததும் ஆடிப் போனேன். நேரில் அவரைப் பார்த்ததும் நெகிழ்ந்தேன். படத்தில் நதி நீர் இணைப்புக்காக நாங்கள் செய்த ஆய்வைச்சொல்லி இது எப்படி சாத்தியப்படும் என்பதையும் எடுத்துச் சொன்னேன்.

அரைமணிநேரம் பொறுமையாகவும், ஆழமாகவும் கேட்ட ரஜினி படத்தில் இடம்பெறும் நதிநீர் இணைப்பு பாடலையும், டிரைலரையும் பார்த்துவிட்டு "எக்சலண்ட்..." என்றார். பல்லாயிரம் கோடி பாராட்டுகளைப் பெற்ற அவரிடமிருந்து எங்களுக்கு ஒரு பாராட்டு கிடைத்ததும் அது பல கோடி பாராட்டுகளுக்கு சமம் என்று நெகிழ்ந்தேன்.

நான் கிளம்பும்போது "கண்டிப்பாக பூமராங் படத்தைப் பார்க்கிறேன்..!" என்றார். இதுவே எங்கள் குழுவிற்கு கிடைத்த முதல் வெற்றி..!" என்கிறார் கண்ணன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர்கள் தான் போட்டி : நிவேதா தாமஸ்நடிகர்கள் தான் போட்டி : நிவேதா தாமஸ் ஆர்ஆர்ஆர் பட நாயகியாக அலியா பட்.? ஆர்ஆர்ஆர் பட நாயகியாக அலியா பட்.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08 மார், 2019 - 07:32 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நதிகள் இணைப்புக்கு கோடி ரூபா தாரேன்னு சொன்னனாரே, அதை இந்த படத்துக்கு தரச் சொல்லுங்கள் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in