Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விரைவில் புதுப்பேட்டை 2 : தனுஷ்

06 மார், 2019 - 11:50 IST
எழுத்தின் அளவு:
Pudhupettai-2-soon-says-Dhanush

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் ஆகியோர் நடித்த படம் புதுப்பேட்டை. அந்த படம் செல்வராகவன் - தனுஷ் கேரியரில் முக்கியமான படமாகவும் அமைந்தது.

புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்கிற கேள்வியை தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. சென்னையில் நடைபெற்ற ஒரு படவிழாவில் கலந்து கொண்ட செல்வராகவனிடம், அந்த விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள் கேட்டபோது, அவர் பதில் கொடுக்கவில்லை. சிறிதுநேரம் மவுனமாக நின்றுவிட்டு, ரசிகர்களைப்பார்த்து சிரித்துவிட்டு சென்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷிடம் கல்லூரி மாணவர்கள் புதுப்பேட்டை 2 குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது தனுஷ் கூறுகையில், புதுப்பேட்டை படத்திற்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது முதல்பாகத்தை விட குறைவில்லாத படமாக இருக்க வேண்டும். அந்த கொக்கிகுமார் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய வேண்டும். அது ரொம்ப கஷ்டமான விசயம். தற்போது, புதுப்பேட்டை 2 படத்திற்கான கதைப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அஜித்திற்காக பேனர் வைத்தவன் நான் : ஆதிக் ரவிச்சந்திரன்அஜித்திற்காக பேனர் வைத்தவன் நான் : ... சீனாவில் 56000 திரைகளில் '2.0' வெளியீடு சீனாவில் 56000 திரைகளில் '2.0' வெளியீடு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Endrum Indian - Kolkata,இந்தியா
06 மார், 2019 - 17:32 Report Abuse
Endrum Indian இவனுங்க எல்லாம் 70 வயது ஆனாலும் சின்ன வயது ஹீரோ மாதிரி 20, 30 கோடி சம்பளத்தில் நடிப்பார்களாம், அதை கூறு கெட்ட ரசிகன் நிறைய பணம் கொடுத்து அதை பார்த்து அவர்களின் சம்பளத்தை ஏற்ற உதவி செய்து ஆனால் அவன் மட்டும் அதே ஏழ்மை நிலையில் தான் இருப்பானாம். நீ மாரி 2 எடுத்தா என்ன மாரி 3 எடுத்தா என்ன???அதனால் நாட்டுக்கு. அட்லீஸ்ட் உன் ரசிகனுக்கு என்ன பிரயோஜனம்????
Rate this:
R RAMAKRISHNAN - Bangalore,இந்தியா
06 மார், 2019 - 13:04 Report Abuse
R RAMAKRISHNAN அதெல்லாம் இருக்கட்டும் சார் மாதம் மும்மாரி எப்போ சார்? I mean மாரி 3 எப்போ சார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in