Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செல்பி விவகாரம், வைரலுக்காக செய்தது : கஸ்தூரி

05 மார், 2019 - 17:02 IST
எழுத்தின் அளவு:
Selfie-issue-:-Kasthuris-statement

'ஜுலை காற்றில்' என்ற படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு இசையை வெளியிட்டனர். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, கார்த்தியைப் பேச அழைக்கும்போது, “ஒரு நிமிடம், உங்க அப்பா இங்க இல்லை, செல்பி எடுக்கிறேன்” என்று கார்த்தியை தன் பக்கம் இழுத்தார்.

இதை எதிர்பாராத கார்த்தி, கோபத்துடன் நகர்ந்து, மைக்கைப் பிடித்து, “தேவை இல்லாத ஒரு விஷயமாக இருக்கிறது. செல்பி எடுப்பதற்கு ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. கேட்டு போட்டோ எடுக்கணும் என்பதே கிடையாது. ஒரு விவஸ்தையே கிடையாது” என்று கடுமையாகப் பேசினார்.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கார்த்தி மற்றும் கஸ்தூரிக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலித்தன. ஆனால் இதுப்பற்றி கஸ்தூரி டுவிட்டரில் கூறியிருப்பதாவது : "ஜூலை காற்றில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது. ஒர்க் அவுட் ஆயிருச்சு. இதை நம்பி கொந்தளிக்கிற உணர்ச்சிவசப்படக்கூடியவர்களுக்கு கண்டிப்பாக ஜூலை காற்றில் படத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள்" என பதிவிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸை செல்லமாகத் தட்டிய ரசிகைபிரபாஸை செல்லமாகத் தட்டிய ரசிகை விஜய் ஆண்டனி படத்தில் சுரேஷ்கோபி விஜய் ஆண்டனி படத்தில் சுரேஷ்கோபி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Endrum Indian - Kolkata,இந்தியா
06 மார், 2019 - 17:21 Report Abuse
Endrum Indian இதனா தெரிவது என்னவென்றால் ஒரு வீடியோ என்பது பிளான் செய்து பிடிக்கப்படும் சமாச்சாரம், அதுவும் வீடியோ, ஆடியோ மிக நன்றாக இருந்தால் நிச்சயமாக வேண்டுமென்றே ஒரு நல்ல வீடியோ பிடிப்பவரால் இதை நாடகமாக அரங்கேற்றுகின்றனர் என்று நாடு மக்கள் தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டால் ஐயோ குய்யோ முறையோ, ஆங்காரம், ஓங்காரம் ஒரு வீடியோவை பார்த்து என்று வாட்சப்பிலிருந்து குறையும்.
Rate this:
Roopa Malikasd - Trichy,இந்தியா
06 மார், 2019 - 14:16 Report Abuse
Roopa Malikasd ஓஹோ சும்மா செஞ்சிங்களா அப்போ சரி நாளைக்கு நீங்க வெளியில வரும்போதும் சேலையை புடித்து இழுப்பணுவோ ...நாங்களெல்லாம் அதையும் வைரலுக்கு தான் செஞ்சிங்கன்னு எடுத்துக்குவோம் ..சரிதானே
Rate this:
அமர் - chennai,இந்தியா
06 மார், 2019 - 14:10 Report Abuse
அமர் கஸ்தூரியும்....ஐயோ ஐயோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in