கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
தமிழ்ப் படங்களுக்குக் கிடைக்காத ஒரு வரவேற்பு, சில சமயங்களில் வேற்று மொழிப் படங்களுக்கோ, டப்பிங் படங்களுக்கோ கிடைத்தால் தமிழ்ப் படங்களை வெளியிடுபவர்களுக்குக் கோபம் வரும். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹாலிவுட் படங்கள் வெளிவரும் நேரத்தில், தமிழ்ப் படங்களுக்கு வரவேற்பே இருக்காது. அப்படி ஒரு விஷயம் இந்த வாரம் நடக்க ஆரம்பித்துவிட்டது.
மார்ச் மாதம் வந்தாலே தேர்வு நேரம் வேறு, அதனால் தியேட்டர்களுக்கு மக்கள் குறைவாகவே வருவார்கள். கடந்த வாரம் வெளியான படங்களின் நிலவரத்தை வைத்தே இதைத் தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் வரும் மார்ச் 8ம் தேதி, “பூமராங், பொட்டு, சத்ரு, ஸ்பாட், கபிலவஸ்து” ஆகிய சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவருகின்றன. இந்த நேரடித் தமிழ்ப் படங்களைத் திரையிட தியேட்டர்காரர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லையாம்.
மாறாக ஹாலிவுட் படமான கேப்டன் மார்வெல் படத்தைத் திரையிடத்தான் விரும்புகிறார்கள் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். இப்படத்தை தமிழில் டப்பிங் செய்து 3டியில் வேறு வெளியிடுகிறார்கள். ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள அவெஞ்சர்ஸ் 4 படத்தில் இடம் பெற உள்ள புதிய கதாபாத்திரம்தான் கேப்டன் மார்வெல். அதனால், இந்தப் படத்தைப் பார்க்க குழந்தைகளும் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் படத்திற்கான முன்பதிவையும் ஆரம்பித்துவிட்டார்கள்.
கேப்டன் மார்வெல் படத்தின் போட்டியை தமிழ்ப் படங்கள் எப்படி சமாளிக்கப் போகின்றன என்பதுதான் இந்த வார கோலிவுட்டின் கேள்வியாக இருக்கும்.